Sunday, January 19, 2014

வேலுநாச்சியார் நாட்டிய நாடகத்தால் மக்கள் மனதில் மத நல்லிணக்கம் வளரும்: வைகோ பேச்சு


சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து போராடியவர்களில் முக்கியமானவர் வீரத்தாய் வேலுநாச்சியார். இவரது வாழ்க்கை வரலாற்றையும், சமூக ஒற்றுமையையும் வலியுறுத்தும் நாட்டிய நாடகம் மதுரை மாவட்டத்தில் நடத்தப்பட்டு வருகிறது. திருமங்கலம் ராஜாஜி சிலைக்கு எதிரே உள்ள திறந்த வெளி மைதானத்தில் நடந்த நாட்டிய நாடகத்தை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தொடங்கி வைத்தார் அப்போது அவர் பேசியதாவது:– 6 மொழிகள் தெரிந்தவர், போர்க்கலைகளை கற்று படைகளை வழிநடத்தி வெள்ளையனை எதிர்த்து போராடிய திறமை பெற்ற தென்னாட்டு வீராங்கனையாக திகழ்ந்தவர் வேலுநாச்சியார். அவரது வாழ்க்கை வரலாறு நாட்டிய நாடகத்தை திருமங்கலத்தில் அரங்கேற்ற வேண்டும் என்றதும், டாக்டர் சரவணன் உதவி கொண்டு இருக்கிறார். அவருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ம.தி.மு.க.வில் போட்டி பொறாமை கிடையாது. பாசமும் நேசமும் உள்ள தொண்டர்களால் 20 ஆண்டு காலமாக கட்டி காத்து வரும் இயக்கம். உழைக்க வருபவர்களை வரவேற்று அரவணைக்கும் பண்பாடு உள்ளவர்கள். கலிங்கப்பட்டி, மதுரையில் அரங்கேற்றி, மறக்க முடியாத திருமங்கலத்தில் வீரத்தியாகி விஸ்வநாததாஸ் வாழ்ந்த ஊரில் அரங்கேற்றி உள்ளோம். சாதி ஒற்றுமை, மத ஒற்றுமையை வலியுறுத்து வது, வேலுநாச்சியாரின் வாழ்க்கை ஒரு உதாரணமாகும். 2011–ல் தேர்தலில் நிற்க வில்லை. ஆனால் தமிழ் இனத்திற்காக மண்ணிற்காக, தமிழர் வாழ்வாதாரங்களை காப்பாற்ற போராடினோம். மதநல்லிணக்கம் மக்கள் மனங்களில் வளரட்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் சின்ன செல்லம், ஜமால் மைதீன், மாநில மருத்துவர் அணி துணைச்செயலாளர் டாக்டர் சரவணன், டாக்டர் லெட்சுமணன், மாவட்ட செயலாளர் வீரதமிழ் செல்வன், கொள்கை பரப்பு செயலாளர் அழகு சுந்தரம், புதூர் பூமிநாதன், முனியாண்டி, பொடா கணேசன், நகர செயலாளர் பூமிநாதன், சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments: