Tuesday, January 21, 2014

‘ஆஹா கல்யாணம்’ படத்தில் மதன்கார்க்கியின் புதுமையான பஞ்ச் பாடல்

இந்திய திரை படங்களுக்கு சர்வதேச அளவில் பெயர் வாங்கி தந்த யாஷ் ராஜ் பட நிறுவனம் முதல் முறையாக தமிழில் நேரடியாக தயாரிக்கும் படம் ‘ஆஹா கல்யாணம்’. நான் ஈ நாயகன் நானி, வாணி கபூர் நடிக்கும் இப்படத்தை இயக்குபவர் அறிமுக இயக்குனர் கோகுல் கிருஷ்ணா. இந்நிலையில் படத்தின் ஆடியோ வெளியீடு நாளை (21-ஆம் தேதி) நடைபெற உள்ளது. அதன் முன்னோட்டமாக இந்த படத்தின் சிங்கிள் டிராக் சமீபத்தில் வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. பிரபல தமிழ் நடிகர்களின் பிரபலமான பஞ்ச் வசனங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட இப்பாடல் ‘பஞ்ச் பாடல்’ என்று அழைக்கப்படுகிறது. மதன் கார்க்கி இயற்றியுள்ள இப்பாடல் உலக அளவில் பிரசித்தி பெறும் என்கிறார்கள் இப்படக் குழுவினர். தரணின் இசையில் அமைந்துள்ள சிங்கிள் டிராக் தங்களது அபிமான நடிகர்கள் மேல் உள்ள பேரன்பினால் பிரிந்து கிடக்கும் ரசிகர்கள் எல்லோரும் ரசிக்க தக்க வகையில் வரவேற்கும் பாடலாக அமைந்துள்ளது. படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

No comments: