ரெயிலில் முன்பதிவு செய்யும் வசதி 90 நாட்களில் இருந்து 120 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அவை இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. ரெயில்களில் பயணம் செய்ய 90 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யும் வசதி இருந்து வந்தது. ரெயில் பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது.
இதனால் காத்திருப்போர்களின் எண்ணிக்கையும் அதிக அளவில் உள்ளது. பயணம் செய்யும் தேதியை முன்னதாக திட்டமிட்டு அதற்கேற்றவாறு முன்பதிவு செய்து நெரிசல் இல்லாமல் செல்ல முடிகிறது.
முன்பதிவு செய்யும் காலத்தை இன்னும் அதிகப்படுத்த வேண்டும் என்று பயணிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்ததையடுத்து அதை பரிசீலித்து 120 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை இன்று (10-ந்தேதி) முதல் ரெயில்வே துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயணிகள் மேலும் 30 நாட்களுக்கு முன்னதாக பயணத்தை வகுத்து கொண்டு முன்பதிவு செய்து பயணம் செய்ய முடியும்.
முன்பதிவு காலத்தை நீட்டிப்பு செய்துள்ளது. பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் ரெயில்வே துறையின் வருவாய் அதிகரிப்பது மட்டுமின்றி பொது மக்களும் அதிகம் பயன் அடைவார்கள். 120 நாட்களாக நீட்டிப்பு செய்ததன் மூலம் ஜூன் மாதம் 8-ந்தேதி புறப்படும் ரெயில்களுக்கு இன்று முன்பதிவு செய்யலாம். இன்று மொத்தமாக முன் பதிவு செய்ய அனுமதி இல்லை. நாளை முதல் மொத்தமாக டிக்கெட் முன் பதிவு செய்யலாம்.
No comments:
Post a Comment