Wednesday, March 21, 2012

சங்கரன் கோவிலில் தேவரின பாதுகாப்பு பேரவை

சங்கரன்கோவில் தேவரின பாதுகாப்பு பேரவைத் தலைவர் திரு .ந .பசும்பொன்பாண்டியன் அவர்களின் பூர்வீகம் என்பதாலும் இடைதேர்தலில் அப்பகுதி மக்களின் எண்ணங்கள் என என்பதனை அறிய வேண்டியும் ,இந்த இடை தேர்தல் நேரத்தில் இரட்டை மலை சீனிவாசனுக்கு ம் வைகுண்டருக்கும்
அரசு விழா பொதுவிடுமுறை அறிவித்த அ.தி .மு .க .அரசினை, இந்திய சுதந்திர போரில் வீர முழக்கமிட்டு வாளேந்தி போரிட்ட முதல் சுதந்திர போரட்ட வீரர் நெற்கட்டான் பாளையக்காரன் பூலித்தேவர் விழா அரசு விழாவாக அறிவிக்கப்படவேண்டும்,மேலும் அவருக்கு சென்னையில் பிரமாண்டமான சிலை நிறுவப்பட வேண்டும் என்று கோரிக்கை வைப்பது என்ற மதுரை செயற்குழுவின் முடிவின்படி கடந்த மூன்றாம் தேதி சங்கரன் கோவிலில் கலந்தாய்வு கூட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மற்றும் தேர்தல் கமிசன் அனுமதி ஆகியவற்றை முன்னரே வாங்கியும் காவல் துறை மேற்படி கூட்டம் நடத்துவதற்கு மிகுந்த தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது .


தேவரின பாதுகாப்பு பேரவையினர் தங்கிஇருந்த வாசுதேவநல்லூர் தொகுதிக்குட்பட்ட இருமங்குளம் கோவில் மண்டபத்திற்கு கடந்த மாதம் இருபத்தி ஒன்பதாம் தேதி காலை வந்த காவல் துறை அதிகாரிகள் அமைப்பு நிர்வாகிகள் மூன்று நபர்களை கைது செய்திருக்கின்றனர் ,மேலும் ஐம்பதிற்கும் மேற்பட்டவர்களை "மரியாதையாக மண்டபத்தை காலி செய்துவிட்டு ஓடிவிடுங்கள் இல்லாவிட்டால் நடப்பதே வேறு " என்று அப்பட்டமாக மிரட்டியுள்ளார்கள். " தொகுதிக்கு வெளியே தங்கி இருக்கும் எங்களை மிரட்டுகிறீர்கள்,சங்கரன்கோவிலில் தங்கி இருப்பவர்கள் அனைவரும் உள்ளூர் ஆட்களா? என்று தேவரின பாதுகாப்பு பேரவையினர் கேட்டவுடன் நிர்வாகிகள் மூன்று பேர் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக வழக்கு பதிவு செய்திருக்கின்றார்கள். பின்பு மறுநாள் பெரியகொவிலான்குளம் என்ற ஊரில் தேவரின மக்களை சந்தித்தபோது அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் அவர்கள் கார்கள் இரண்டை பறிமுதல் செய்துள்ளனர். தேவரின பாதுகாப்பு பேரவையினர் தேர்தல் பிரசாரம் செய்யவில்லை என்று கூறியும் அதனை ஏற்க மறுத்திருக்கின்றனர் ,இருந்தாலும் அவர்கள் மனம்தளராமல் பல கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்திருக்கின்றனர் . அதிகாரிகள் அனைவரும் "நீங்கள் யாருக்கு ஆதரவு தரபோகிறீர்கள் என்பதனை சொல்லுங்கள் என்று கட்டயாபடுத்தியும் , கலந்தாய்வு கூட்டத்தில் எமது மக்களின் கருத்துகளை கேட்டுத்தான்,முடிவினை,அறிவிப்போம் என்று உறுதியாக கூறியுள்ளனர். இறுதியில் மூன்றாம் தேதி காலை பதினோரு மணியளவில் மாலை கூட்டத்தை ரத்து செய்தார்கள் ,ஆனால் அவர்கள் திட்டமிட்டபடி இடத்தை மாற்றி வேறு இடத்தில் ரகசிய கூட்டம் நடத்தியுள்ளனர். அதன்பிறகு தேவரின பாதுகாப்பு பேரவை அ.இ.அ.தி.மு.க விற்கு ஆதரவாக களமிறங்கி உள்ளது. அ .தி .மு .க அரசினை வலியுறுத்தி இந்திய சுதந்திர போரில் வீர முழக்கமிட்டு வாளேந்தி போரிட்ட முதல் சுதந்திர போரட்ட வீரர் நெற்கட்டான் பாளையக்காரன் பூலித்தேவர் விழா அரசு விழாவாக அறிவிக்கப்படவேண்டும் , அவருக்கு சென்னையில் பிரமாண்டமான சிலை நிறுவப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து களப்பணியும் செய்துள்ளது. இந்த ஆதரவு நிலைக்கு, கோரிக்கைக்கு அ .தி .மு .க அரசு எப்போது பதிலளிக்கப் போகிறது என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-

No comments: