காங்கிரஸ் கட்சியின் தோல்வி மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்கள் என்று கூறி, பெரும் நிறுவனங்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் உதவிடும் மக்கள் விரோத கொள்கைகளை நடை முறைப்படுத்தி வந்த காங்கிரஸ் கட்சியை ஏழை, எளிய, நடுத்தர மக்கள் முற்றிலுமாக நிராகரித்து விட்டதையே 5 மாநிலங்களுக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட அவமானகரமான தோல்விக்குக் காரணமாகும்.
2014-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலிற்கான முன்னோட்டம் என்று கருதப்பட்ட இத் தேர்தலில், உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி படு தோல்வியைச் சந்தித்துள்ளது.
2014-ம் ஆண்டிலோ அல்லது அதற்கு முன்னதாகவோ நடைபெறப் போகும் மக்களவைத் தேர்தலிலும் பிரதிபலிக்கும் மாநில மக்களின் உணர்வுகளை புறக்கணித்து ஆட்சி நடத்தும் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய தோல்வி ஏற்படும் என்பது உறுதி.
மாநில மக்களின் உணர்வுகளைப் புறக்கணிக்கும் எந்தக் கட்சியானாலும் இப்படிப்பட்ட முடிவையே எதிர்காலத்திலும் சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதும் நிச்சயம் என சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment