Tuesday, March 13, 2012

தி.மு.க., செயலாளர் கடத்தலில் அதிரடி : திண்டுக்கல் லாட்ஜில் "என்கவுன்டர்' :ரவுடி வரிச்சியூர் செல்வம் கைது

ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றிய செயலாளர் கதிரவன் (தி.மு.க.,) கடத்தல் வழக்கில் தொடர்புடைய கேரள நபர், திண்டுக்கல்லில், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ரவுடி வரிச்சியூர் செல்வம் கைது செய்யப்பட்டார்.மதுரை நடராஜ் நகரில் வசிப்பவர் கதிரவன். ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் தி.மு.க., செயலாளரான இவரை, பிப்.,12ல் விரகனூர் அருகே, "சி.பி.ஐ., அதிகாரிகள்' என்றுக்கூறி, சிலர் அவரை கடத்தி, ரூ.2 கோடி கேட்டனர். அவர்களிடமிருந்து தப்பிய கதிரவன், பிப்.,15ல், மதுரை எஸ்.பி., ஆஸ்ராகர்க்கிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக, ரித்தீஷ் எம்.பி.,யிடம் விசாரணை நடந்தது. இந்நிலையில், ரவுடி வரிச்சியூர் செல்வம் தலைமையிலான கும்பல், கதிரவனை கடத்தியதாகவும், திண்டுக்கல்லில் பதுங்கியிருப்பதாகவும், மதுரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, நேற்று இரவு 7.15 மணிக்கு, திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே சுகன்யா லாட்ஜில், இன்ஸ்பெக்டர்கள் ஜெயச்சந்திரன், சேதுமணி மாதவன் தலைமையிலான போலீசார் சோதனையிட்டனர்.கேரள முகவரியில், இரு அறைகளில் தங்கியிருந்த ஐந்து நபர்கள் குறித்து விசாரித்தனர். இதில் ஒருவன், இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரனை தாக்கி விட்டு தப்ப முயன்றான். அந்த நபரை போலீசார் சுட்டனர். இடது தோள்பட்டையில் குண்டு பாய்ந்து அவன் பலியானான். மற்றொருவன் தப்பி ஓடினான். அறையில் பதுங்கியிருந்த ரவுடி வரிச்சியூர் செல்வம், கேரளாவை சேர்ந்த பிஜூ உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.

No comments: