மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே கோவில் திருவிழா கலை நிகழ்ச்சியின்போது, இரு தரப்பினர் கல் வீசி தாக்கிக் கொண்டதில் சிறுமி மற்றும் தலைமைக் காவலர் ஒருவர் காயமடைந்தார். இதுதொடர்பாக, 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
கள்ளிக்குடி அருகே வேப்பங்குளத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு கடந்த இரு நாள்களாக திருவிழா நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை இரவு நாடக நிகழ்ச்சி நடைபெற்றதாம். அப்போது, நிகழ்ச்சியில் பாடப்பட்ட ஒரு பாடலுக்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனராம். டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் தலைமையிலான போலீஸார் சமாதானப்படுத்தியும் பலனில்லை. இதையடுத்து, மற்றொரு தரப்பினர் கல் வீசி தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில் முருகன் என்பவரின் மகள் கற்பகவள்ளி (5) என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதேபோல, கள்ளிக்குடி தலைமைக் காவலர் சுந்தரவடிவேலுவும் காயமடைந்தார். இருவரும் திருமங்கலம், மதுரை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, வேப்பங்குளத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர். இதுதொடர்பாக புகார்களின்பேரில், இரு தரப்பையும் சேர்ந்த 21 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட ஒரு தரப்பினரை திருமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸார் புதன்கிழமை அழைத்து வந்தனர். அப்போது, திராவிட விழிப்புணர்வுக் கழகச் செயலர் பி.டி. அரசகுமார்,பாரதீய பார்வார்ட் பிளாக் நிறுவனர் முருகன்ஜி மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் முன், மதுரை சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த மாவட்ட ஊரகக் காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் போலீஸாருடன் சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன்பின்னர் மறியல் கைவிடப்பட்டது.
NOTE : MOST OF THE ARRESTED ARE FROM MUKKULATHOR COMMUNITY, EVEN THOUGH THE PROBLEM WAS STARTED BY ANOTHER CASTE PEOPLE
.

No comments:
Post a Comment