Thursday, April 18, 2013

அன்று அழகு முத்துக்கோன் இன்று கட்டப்பொம்மன் நாளை யாரோ!! ஒட்டு அரசியலுக்கு பலியாகிறது வரலாறு – திரு பசும்பொன் பாண்டியன் கருத்து

தமிழக சட்டப்பேரவையில் தமிழ் நாட்டின் முதல் சுதந்திர போராளி கட்டபொம்மனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பு வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை எற்படுத்தியுள்ளது



இது குறித்து தேவரின பாதுகாப்பு பேரவை தலைவர் திரு பசும்பொன் பாண்டியன் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது : ” வரலாற்றை வைத்துக்கொண்டு நடைபெறும் அரசியல்விளையாட்டுக்கள் அதிகரித்து விட்ட இன்றைய காலகட்டத்தில் மீண்டும் சர்ச்சையை அதிகரித்து உள்ளது தமிழக முதல்வரின் நேற்றைய அறிவிப்பு .

யார் யாருக்கு வேண்டுமானாலும் மணிமண்டபம் கட்டிக்கொள்ளுங்கள் அதை பற்றி எங்களுக்கு கவலையில்லை. ஆனால் வரலாற்றை மாற்றி எழுத நினைத்தால் அதை எங்களால் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது.வரலாற்றைப்பற்றி தெரிந்தால் அதை பேச வேண்டும் இல்லையென்றால் ஓட்டுக்கு என்ன தேவையோ அதைமட்டும் செய்தால் நல்லது. கட்டபொம்மனை பற்றி சொன்னால் ” அவர் கருவில் இருந்த பொழுது வாளெடுத்து வெள்ளையரின் தலையை சீவியவர் மாமன்னர் புலித்தேவர்”



வருங்காலம் மன்னிக்காது :

அன்று அழகு முத்துக்கோன் என்பவர் முதல் சுதந்திர போராட்டவீரர் என்று கூறி சென்னையில் சிலை வைத்து ஒரு சாதியை கவர முயற்சித்த முதலமைச்சர் இன்று கட்டப்பொம்மன் என்று கூறிவருகிறார் .இதேபோல் நாளை யாரை முன்னிருத்தப்போகிறார் என்று தெரியவில்லை .இப்படியே போனால் வருங்காலம் வரலாற்று பிழை செய்தவர்களை மன்னிக்காது என்று கூறினார் .

இது பற்றி தேவர் தேசிய பேரவை தலைவர் திரு கே.சி. திருமாறன் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:


” முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மக்களின் மனநிலையை அறியாமல் யாரோ தருகின்ற அரசியல் கணக்கை வைத்துக்கொண்டு தொடர்ந்து பெரும்பான்மை இனமான தேவரினத்ததை பழிவாங்கி வருவது கண்டிக்கத்தக்கது . இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு இடம் பெயர்ந்த சானார் என்று அழைக்கப்படும் நாடார்களை மூவேந்தர் வம்சம் என்று அறிவித்து தனக்கு வரலாறு தெரியாது என்று சில மாதங்களுக்கு முன்பு நிரூபித்த ஜெயலலிதா அவர்கள் மீண்டும் கட்டப்போம்மனே முதல் சுதந்திர போராட்ட வீரன் என்று கூறி மாபெரும் தவறு செய்துள்ளார் . தமிழகத்தில் அமையும் ஆட்சியை நிர்ணயிக்கக்கூடிய தேவரின மக்களின் மனதை தொடர்ந்து புரிந்து கொள்ளாமல் நடக்கும் தமிழக அரசை வெகுவாக மக்கள் வெறுத்து வருவதை அரசு கவனத்தில் கொள்வது ஆட்சிக்கு நல்லது. இந்த சூழ்நிலை தொடர்ந்தாலோ ,வெளியிட்ட அறிவிப்புகளை திருத்திக்கொள்ளாமல் இருந்தாலோ தேர்தல் நேரத்தில் மக்களின் மனநிலை அரசுக்கு புரியும், எங்களைப்போன்றவர்கள் துணை நிற்போம் ” என்று கூறினார்.


No comments: