1972ல் தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் 'காசேதான் கடவுளடா'.
இதில் முத்துராமன், ஸ்ரீகாந்த், தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி, லட்சுமி, மனோரமா ஆகியோர் நடித்திருந்தனர். கோபு இயக்கியிருந்தார். ஏவி.எம். நிறுவனம் தயாரித்தது. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் "காசேதான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா", “ஜம்புலிங்கமே ஜடாதரா” ஆகிய பாடல்கள் மிகவும் பிரபலம் அடைந்தவை.
சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படம் மீண்டும் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. இதற்கான ரீமேக் உரிமையை விஸ்வாஸ் சுந்தர் வாங்கியுள்ளார். இதன் ரீமேக்கை 'ஒன்பதுல குரு' படத்தை இயக்கிய பி.டி.செல்வகுமார் இயக்குகிறார். தற்போது நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
தேங்காய் சீனிவாசன் வேடத்தில் வடிவேலு அல்லது சந்தானத்தை நடிக்க வைக்க முயற்சி நடைபெறுகிறது. கிரேஸிமோகன் வசனம் எழுதுகிறார்.
.

No comments:
Post a Comment