மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடியைச் சேர்ந்த வேப்பங்குளம் என்ற கிராமத்தில் நேற்று நள்ளிரவு இரு பிரிவினருக்கு இடையே மோதல் வெடித்தது.
அங்குள்ள காளியம்மன் கோயில் திருவிழாவில் நேற்று இரவு நாடகம் போட்டிருக்கிறார்கள். அப்போது, அம்மன் பாடல்கள், பக்திப் பாடல்கள் பாடப்பட்டுள்ளது. பின்னர் இறுதியில் தேவர் குறித்த பாட்டு ஒன்றினைப் பாடியுள்ளனர். அதற்கு ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கு மற்றொரு தரப்பு கண்டனம் தெரிவித்துள்ளனது. இதை அடுத்து இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு நிகழ்ந்துள்ளது. அப்போது போலீஸார் தடுக்க முற்பட்டுள்ளனர். அதில், ஏட்டு ஒருவருக்கு மண்டை உடைந்தது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதை அடுத்து, இரு தரப்பிலும் சேர்த்து தலா 10 பேர் வீதம் 20 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கே கலவரம் மூளாமல் தடுக்க போலீஸார் குவிக்கப்பட்டனர்.
.

No comments:
Post a Comment