தேவிபட்டினம் பள்ளி ஆண்டுவிழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு திரும்பிய அகில இந்திய பார்வர்டு பிளாக் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு பி.வி. கதிரவன் அவர்கள் சாதி வெறி கும்பல்களால் தாக்குதலுக்கு உள்ளானார். இந்த தாக்குதலின் போது எம் எல் எ கார் முன்னே சென்ற பல தொண்டர்கள் தாக்குதலுக்கு உள்ளானார்கள். அவர்கள் நெல்லை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதனை கண்டித்து தேனிமாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.ஆர்.தமிழன்.அவர்கள் தலைமையில் ஆக்ரோசமான ஆர்பாட்டம் மற்றும் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.
சட்டத்தை கையில் எடுக்க வேண்டி வரும், பார்வர்டு பிளாக் தொண்டர்கள் தாக்குதலுக்கு கண்டனம் – திரு வி.கே. கவிக்குமார்
திருநெல்வேலி மாவட்டம் தேவிபட்டினத்தில் பள்ளி ஆண்டுவிழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு திரும்பிய அகில இந்திய பார்வர்டு பிளாக் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு பி.வி. கதிரவன் அவர்கள் சாதி வெறி கும்பல்களால் தாக்கப்பட்டார். மேலும் தொண்டர்கள் பலர் படுகாயம் அடைந்தனர். இதனை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. பல்வேறு அமைப்புகள் தமது கண்டனங்களை தெரிவித்துள்ளன. இந்நிலையில் முக்குலத்தோர் எழுச்சி கழக பொதுச்செயலாளர் திரு வி.கே. கவிக்குமார் அவர்கள் தமது கண்டனத்தை தெரிவிக்கும்போது கூறியதாவது:
“அகில இந்திய ஃபார்வார்டு பிளாக் கட்சியின் மாநிலசெயலாளர் அண்ணன் பி.வி.கதிரவன் எம்.எல்.ஏ மற்றும் தொண்டர்களை வழி மறித்து தாக்கிய சாதி வெறி கும்பலையும் அவர்களை தூண்டி விட்டவர்கள் மீதும் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற செயல்களை செய்யும் சாதிவெறி பிடித்தவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும். தமிழக அரசும், காவல்துறையும் இது போன்ற செயல்களை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தால் நேதாஜி தொண்டர்களும், தேவரின மக்களும் சட்டத்தை கையில் எடுக்க வேண்டி வரும்” என்று கூறினார்.
மீண்டும் எமது பரம்பரைக் குணத்தை காட்டவேண்டிய சூழல் – திரு முருகன் ஜி ஆவேசம்
நேதாஜியும், தேவரும் கட்டிக்காத்த புலிக்கொடியை தாக்கும் எண்ணம் சிலர் மத்தியில் ஏற்பட்டது சரியான போக்கு கிடையாது. தொடர்ந்து தேவரினத்தவர்மீது தாக்குதல் தொடுப்பது அதுவும் ஒரு தேசியக் கட்சியில் அங்கம் வகிக்கும் எம் இனத்தவர்கள் மீது தாக்கியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சிலரின் செயல்பாடு சரியில்லை. அரசு சம்பந்தப்பட்ட தேசவிரோத கும்பல்களை கைது செய்து கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும். தேசத்தைக் காக்க நாங்கள் மீண்டும் பரம்பரைக் குணத்தை காட்டவேண்டிய சூழலை யாரும் உருவாக்க வேண்டாம்” என்று கூறினார்
பார்வர்டு பிளாக் தொண்டர்கள் மீது தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுப்போம் – தமிழ்நாடு தேவர் பேரவை
தமிழ்நாடு தேவர் பேரவை பொதுச்செயலாளர் திரு பசும்பொன் முத்தையாத் தேவர் அவர்கள் கூறுகையில் :
” அனைத்து சமூகத்தினருக்கும் குறிப்பாக தேவர் சமூகத்தவர் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி நாட்டின் சட்ட ஒழுங்கிற்கு அச்சுறுத்தலாக இருந்துவரும் ஒரு குறிப்பிட்ட சாதி வெறியர்களை அரசு ஒடுக்காமல் விட்டதன் விளைவாகவே இந்த தாக்குதலை பார்க்கின்றேன். புலிக்கொடி ஏந்தி வலம்வரும் தொண்டர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு பி வி கதிரவன் மீது தாக்குதல் நடத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது. தேவர் சமூகத்தினருக்கு ஏற்படும் அநீதிக்கு காட்டும் அரசின் மெத்தனத்திற்கும், சதியில் ஈடுபடும் சாதி வெறியர்களுக்கும் தக்க பதிலடி கொடுக்கப்படும்” என்று கூறினார்.
புலிக்கொடி ஏந்தியவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது – திரு கே.சி.திருமாறன் கண்டனம்
தேவர் தேசியப் பேரவை தலைவர் திரு கே.சி.திருமாறன் அவர்களை தொடர்பு கொண்டபோது அவர் கூறியதாவது :
” நாங்கள் எங்கள் அமைப்பின் கொடிகளில் புலியினை பொறித்திருப்பது வெறும் அழகிற்காக அல்ல. பரம்பரை பரம்பரையாக தொன்றுதொட்டு வரக்கூடியது. அந்த வகையில் இந்திய சுதந்திர தாகத்தால் அன்னியனுக்கு எதிராக படைகட்டி போராடிய வங்கத்து சிங்கமும், தென்னாட்டு போஸ் தேவர் அவர்களும் தாங்கிப் பிடித்த புலிக்கொடியை கட்டிக்காத்துவரும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் திரு பி.வி.கதிரவன் அவர்கள் மீதும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தொண்டர்கள் மீதும் சாதி வெறி கும்பல்கள் தாக்குதல் நடத்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒரு தேசிய கட்சியின் சட்டமன்ற உறுப்பினருக்கே இப்பேற்பட்ட நிலையென்றால் பொதுமக்களின் நிலையை கருத்தில் கொண்டு தாக்கிய உண்மைக் குற்றவாளிகளை இரும்புக் கரம்கொண்டு அரசு தண்டிக்கவேண்டும்” என்று கூறினார்.

No comments:
Post a Comment