கடந்த ஆண்டு தேவர் ஜெயந்தியின்போது, தலித்திஸ்ட் தீவிரவாதிகளால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அச்சம்பவத்தில் காயமடைந்தோருக்கு அரசு வேலை வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தேவர் ஜெயந்திக்கு சென்று திரும்பியவர்களின் வேன் மீது மதுரை சிந்தாமணி அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் 7 பேர் இறந்துவிட்டனர். 6 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.
காயமடைந்த 6 பேருக்கும், அரசு வேலை வழங்கக் கோரி தேவர் பேரவை மற்றும் புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் . பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ராவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
ஆட்சியரிடம் அளிக்கப்பட மனுவில் கூறப்பட்டுள்ள விவரம் :
பெட்ரோல் குண்டு வீச்சில் படுகாயமடைந்த 6 இளைஞர்களும், தங்களது அன்றாட கடமைகளை செய்ய முடியாத நிலையில் உள்ளனர். அவர்களை மாற்றுத் திறனாளிகள் என அறிவித்து, நிவாரண உதவியாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். மேலும் அவர்களது நிலையைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கோ அல்லது அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கோ அரசு வேலை வழங்க வேண்டும்.
இவ்விரு கோரிக்கையையும் வலியுறுத்தி, ஒரு மாதத்துக்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தி மனு அளித்தோம். இதுவரை, அம்மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது எனத் தெரியவில்லை. ஆகவே, பாதிக்கப்பட்ட இளைஞர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு மேற்குறிப்பிட்ட கோரிக்கையை நிறைவேற்றித் தரவேண்டும். பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை, தனி நீதிபதி அமைத்து விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும் , குற்றம் புரிந்தவருக்கு நாட்டில் உள்ள அதிகப்பட்ச்ச தண்டனையை பெற்றுத்தர வேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment