Sunday, April 13, 2014

மாறவர்மன் சுந்தர பாண்டியன்


மதுரையை மீட்ட மாறவர்மன் சுந்தர பாண்டியன் இவரை எத்தனை பேருக்கு தெரியும். இவரை மறந்தவன் மதுரைக்காரன் இல்லை. அனைவரும் பகிரவும். இவர் இல்லையென்றால் இன்றைய மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சாதாரண கோவிலாக சிறிய கோபுரங்களுடன் இருந்திருக்கும். 300 ஆண்டுகள் அடிமைப்பட்டு கிடந்த பாண்டிய நாட்டை சிறிய படை கொண்டு பெரிய சோழப்படையை வென்று மீட்டெடுத்தார். தன் ஆட்சிக்காலத்தில் மீனாட்சி அம்மன் கோவிலை அகலப்படுத்தி கிழக்கு கோபுரத்தை பிரம்மாண்டமாக கட்டி முடித்தார் முதல் பெரிய கோபுரமாகும். இவர் ஆரம்பிக்கவில்லை என்றால் பின் யாருக்கும் கட்டும் எண்ணம் வந்திருக்காது. மதுரையை மீட்டதோடு மட்டுமில்லாமல் சோழநாடு சேரநாடு இலங்கை ஆந்திரம் கன்னடத்தின் சிலபகுதிகளும் இவர்கட்டுப்பாட்டில். இருந்தும் மூன்றாம் ராசராச சோழன் இவருக்கு கட்டுபட்டு சிற்றரசனாக இருக்க ஒப்புக்கொண்டதால் சுயாட்சி வழங்கினான். அது இவரது மாண்பு. தஞ்சை கோவிலை கட்டிய முதலாம் இராசஇராச சோழன் செய்த அதே அளவு சாதனையைதான் இவரும் செய்தார் அவர் ஆண்ட அதே அளவு நிலப்பரப்பை இவர் 300 ஆண்டுகள் அடிமைப்பட்டுக்கிடந்த சிறு படைவைத்தே வென்றார். ஆனால் அவரை பேசும் அளவு நம் மக்கள் இவரை மறந்து விட்டோம் இவருக்கு ஒரு சிலையோ இவர் பெயரில் அடையாளங்களோ இல்லை. ஆனால் கிழக்கு கோபுரம் உள்ளவரை இவர் பெயர் சொல்லும். மாறவர்மன் சுந்தரபாண்டியன் வாழ்க !! மதுரை பகுதியில் ஆண்பிள்ளைகளுக்கு சுந்தரபாண்டியன் என்ற பெயர் வைப்பது பிரபலம்.

No comments: