காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய இருப்பதாக நடிகர் கார்த்திக், சமூக சமத்துவப் படையின் தலைவர் சிவகாமி ஆகியோர் தெரிவித்தனர்.
தமிழகத்தில் 38 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ், தென் சென்னை தொகுதிக்கு மட்டும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.
அங்கு நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக்கை நிறுத்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் முயற்சி மேற்கொண்டார். ஆனால் மதுரை, விருதுநகர், வட சென்னையில் போட்டியிட கார்த்திக் விருப்பம் தெரிவித்தார்.
இந்தத் தொகுதிகளுக்கு ஏற்கெனவே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டதால் தென் சென்னையில் போட்டியிடுமாறு ஞானதேசிகன் வலியுறுத்தினார். அதற்கு கார்த்திக் மறுத்ததால் தென் சென்னை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக எஸ்.வி. ரமணி அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் காங்கிரûஸ ஆதரித்து பிரசாரம் செய்ய இருப்பதாக கார்த்திக், சமூக சமத்துவப் படை அமைப்பின் தலைவரும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சிவகாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
இருவரும் சத்தியமூர்த்தி பவனில் ஞானதேசிகன் முன்னிலையில் இதனை அறிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியது:
நடிகர் கார்த்திக்: கடந்த 10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் நாடு முன்னேற்றம் கண்டுள்ளது. காங்கிரஸ் வெற்றி பெற தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வேன்.
சிவகாமி: காங்கிரஸூடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட விரும்பினோம். சில காரணங்களால் அது முடியாமல் போய்விட்டது என்றார்.
No comments:
Post a Comment