)
மதுரை மாவட்டம் வில்லூர் கிராமத்தில் இரு சமுதாயத்தினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. மோதல் காரணமாக, வில்லூர் காவல்நிலையத்தில் வழக்குகள் இரு சமுதாயத்தினர் மீதும் போடப்பட்டது.
அந்த இரு சமூகத்தினரும், கிராம மக்கள் முன்னிலையில் ஒன்றுகூடி அமைதியாகவும் சமாதானமாகவும் போகும் எண்ணத்துடன், வருங்காலத்திலும் இரு சமூகத்தினரும் ஒற்றுமையாக இருக்கும் எண்ணத்துடன் சமரசம் செய்து கொண்டனர். மதுரை உயர்நீதிமன்றமும் அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும், வாபஸ் பெற உத்தரவிட்டது.
ஆனால் ஜெயலலிதா அரசோ, போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறாமல் அந்த வழக்கை சிபிசிஐடி போலீசால் மறுவிசாரணை செய்ய உத்தரவிட்டது. இரு சமூகத்தினருமே விரும்பி சமரசம் செய்து கொண்டதை ஏற்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், இந்த அரசு கேட்கவில்லை என்றால், மக்கள் ஒற்றுமையாக இருப்பதை ஜெயலலிதா விரும்பவில்லையா?
No comments:
Post a Comment