Tuesday, April 22, 2014

இனம் காக்க . . . . .


* * * வாக்களிக்க வேண்டியது நமது ஜனநாயக கடமை. எனவே நன்கு சிந்தித்து உங்கள் வாக்குகளைப் பதிவு செய்யுங்கள். சமுதாய ஒற்றுமையை நிரூபிக்க நமது சமுதாய வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் தவறாது வாக்களிக்கவும். குறைந்தது 5 தொகுதிகளில் தலா 1 லட்சத்துக்கு மேல் நமது சமுதாய வேட்பாளர்கள் வாக்குகள் பெற்றால் அதுவே மிகப்பெரிய வெற்றியாகும். நம்மை மற்றவர்கள் மதிக்க, முக்கியத்துவம் தர, இந்த வெற்றி தான் தற்போது மிக முக்கியம். நமது வேட்பாளர்கள் போட்டியிடாத தொகுதிகளில் பா.ஜ.க. வேட்பாளர்கள் வெற்றிபெற உதவுங்கள். 0 0 0 - பா.ஜ.க. வுக்கு எதற்காக வாக்களிக்க வேண்டும்? * * * பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியல் சட்டம் மாற்றம் பெரும். இப்போது பெரும்பாலானவர்களைப் பாதிக்கும் சட்டங்களும் மாற்றப்படும். நமக்கு பாதகமான சட்டங்கள் , சிலருக்கு சாதகமாக கொடுவரப்பட்டவை. ஆகவே சட்டங்கள் மாற்றம் பெற பா.ஜ.க. வெற்றியடையச் செய்வது அவசியம். நீங்கள் போடும் ஓட்டு, உங்கள் கழுத்துக்கு கத்தியாகலாம். அடக்கு முறைகளும், பல கொலைகளுக்கு உடந்தையாக இருந்ததும், என்கவுண்டர் கொலைகளும், தேவர் ஜெயந்தி தடையும் இதற்கு உதாரணம். 0 0 0 - ஆறிலும் சாவு, நூறிலும் சாவு. அவங்களுக்கு என்கவுண்டர்ல சாகனும்னு விதி. பெட்ரோல் குண்டுல சாகனும்னு விதி. அதுக்காக நான் எப்போதும் போடுற கச்சிக்கு ஓட்டு போடாமல் இருக்க முடியாது. மாற்றி போட்டால் என் கட்சி தோற்று, என் எதிரி கட்சி வெற்றி பெற்றுவிடும். * * * உன் எண்ணப்படி ஓட்டு போடு. ஆனால் உன் இன சொந்தங்களைக் கொல்லும் பழி உன்னையே சாரும். துணை போகிற , ஆணையிடுகிற ஆட்சியாளர்களுக்கு அதிகாரத்தை உனது ஓட்டு தான் கொடுக்கிறது. மேலும் நீ தொடர்ந்து வாக்களிப்பதால், உன்னை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை. ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தவுடன், அது செய்யும் முதல் பணி, கட்சியை மேலும் வலுப்படுத்துவதே. அடுத்து வரும் தேர்தல்களில் பெரும் வெற்றி பெறுவதற்கான பணிகளை மட்டுமே செய்கிறது. அந்த கட்சிக்கு வாக்களிக்காத பிரிவினரை அடையாளம் கண்டு, அவர்கள் ஓட்டைப் பிரிப்பதற்காக, அவர்களுக்கு அதி முக்கியத்துவம் கொடுக்கிறது. உனது பாதிக்கப்பட்டவர்களின் நிவாரணம் பெற வருடக்கணக்கில் போராடுவதையும், வாக்களிக்காதவர்கள் கொலையுண்ட 5 வது நிமிடத்தில் 5 லட்சம் நிவாரணம் பெறுவதும் இதற்கு உதாரணம். எனவே நன்கு சிந்தித்து உங்கள் வாக்குகளைப் பதிவு செய்யுங்கள்.

No comments: