புதுடில்லி : 2010ம் ஆண்டின் தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக தபாங், சிறந்த கலை மற்றும் பாரம்பரிய படத்திற்கான விருது லீவிங் ஹோம், சிறந்த அறிவியல் படத்திற்கான விருதை ஹார்ட் டு ஹார்ட் படமும், சிறந்த விளையாட்டு படமாக பாக்ஸிங் லேடீஸ், சிறந்த கல்வி படமாக அத்வைதம் படமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் தனுஷ்சும், சிறந்த நடிகை விருதை சரண்யா பொன்வண்ணனும், சிறந்த துணை நடிகர் விருதை தம்பி ராமையாவும், சிறந்த மாநில மொழி திரைப்பட வருது தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கும் கிடைத்துள்ளது.
ஆடுகளம் திரைப்படத்தின் இயக்குநர் வெற்றி மாறனுக்கு சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. சிறந்த திரைக்கதைக்கான விருதும் ஆடுகளம் படத்துக்கு கிடைத்துள்ளது.
சிறந்த நடன அமைப்புக்கான விருது ஆடுகளம் படத்தின் நடன இயக்குநர் தினேஷ் குமாருக்கு கிடைத்துள்ளது. சிறந்த தயாரிப்புக்கான விருது எந்திரன் படத்துக்கு கிடைத்துள்ளது.
No comments:
Post a Comment