Thursday, May 5, 2011

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் நல்ல நடிகர்கள் உள்ளனர்; டைரக்டர் தருண் கோபி பேட்டி


இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் நல்ல நடிகர்கள், டைரக்டர்கள் உள்ளனர் என்று டைரக்டர் தருண் கோபி கூறினார்.

இயக்குநர் தருண்கோபி பேட்டி வருமாறு:-

நான் ஆரம்பரத்தில் கன்னட இயக்குநர் உபேந்திரா, மனோஜ்குமார், செந்தில்நாதன், பிரபுதேவா ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளேன்.

முதன்முதலாக நடிகர் விசால், ஸ்ரேயாரெட்டி, ரீமாசென் ஆகியோரை வைத்து திமிரு படத்தை இயக்கினேன். அது வெற்றி படமாக அமைந்தது. பின்னர் சிம்புவை வைத்து சிலம்பாட்டம் படத்தை இயக்கினேன். அப்போது ராசுமதுரவனின் மாயாண்டி குடும்பத்தார் படத்தில் நடிக்க வைத்தார். நல்ல கதையாக இருந்ததால் அதில் நடித்தேன்.

இந்தியாவிலேயே நல்ல இயக்குநர்கள், நடிகர்கள் தமிழகத்தில்தான் உள்ளனர். ஆனால் விருதுகள் மட்டும் தாமதமாக கிடைக்கிறது. பிரபல இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தருக்கு தாதா சாகிப் பால்கே விருது இப்போது தான் கொடுத்திருக்கிறார்கள். அவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் தண்ணீர் படம் இயக்கிய போதே கொடுத்திருக்க வேண்டிய விருது இப்போது கிடைத்திருக்கிறது.

நான் நடிக்கும் படங்கள், இயக்கும் படங்கள் அனைத்தும் கலாச்சாரத்தை மறக்காத ஊர்களில் வைத்துதான் செய்து வருகிறேன். கலாச்சாரத்தை மறந்த எந்த ஒரு தமிழனும் முன்னேற முடியாது. தற்போது பேச்சியக்கா திரைப்படத்தில் நடித்து வருகிறேன்.

No comments: