Thursday, May 5, 2011

பின்லேடன் கொல்லப்பட்டது குறித்த புதிய தகவல்கள்

பின்லேடன் கொல்லப்பட்டது குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவல்கள்:

மனைவி மற்றும் 12 வயது மகள் கண் எதிரே ஒசாமா பின்லேடன் தலை மற்றும் மார்பில் சுட்டு கொல்லப்பட்டார்

பின்லேடன் நிராயுதபாணியாக இருந்தார்

பின் லேடனுக்கு பாதுகாப்பாக நின்ற பெண் சுடப்பட்டார் ஆனால் கொல்லப்படவில்லை;

பின் லேடனுக்கு அரணாக நின்ற பெண் அவரது மனைவியல்ல; ஆப்கானிஸ்தானிலிருந்து, அமெரிக்க படைகள் வெளியேறுவதில் பிரச்சனையில்லை. பின்லேடனுக்கு மிகவும் பிடித்தமான அவரது மனைவி மற்றும் 12 வயது மகள் கண்ணெதிரேயே அவர் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டார். அவர்கள் இருவரும் தான் பின்லேடனின் உடலை அமெரிக்க படையினருக்கு அடையாளம் காட்டியவர்கள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

27 வயது அமல் அல் சடாஹ் என்பவர் தான் பின் லேடனின் இளம் மனைவி. இவர் ஏமன் நாட்டை சேர்ந்தவர். பாதுகாப்பு காரணங்களுக்காக இவரை ஏமனிலேயே இருக்கும்படி பின் லேடன் உத்தரவிட்டிருந்தார். இருப்பினும், இவர் பின் லேடனை பிரியாமல் அவருடனேயே இருந்தார். இவர் காலில் சுடப்பட்டார். உயிருக்கு ஆபத்தில்லை. சுட்டுக்கொல்லப்பட்ட போது, பின் லேடன் ஏ கே 47 ரக துப்பாக்கி வைத்திருந்ததாகவும் தனது மனைவியை மனித கேடயமாக பயன்படுத்தியதாகவும் அமெரிக்க அதிகாரிகள் முதலில் தெரிவித்திருந்தனர்.

ஆனால், சுட்டுக்கொல்லப்பட்ட போது பின் லேடன் ஆயுதம் ஏதும் வைத்திருக்கவில்லை என்று நேற்றிரவு அமெரிக்க கடற்படை அதிகாரிகள் கூறியுள்ளனர். அதேபோல், மகன் மற்றும் மனைவியும் கொல்லப்பட்டனர் என்ற முரண்பட்ட தகவல்களை அமெரிக்க முதலில் தெரிவித்தது. தற்போது மனைவி உயிருக்கு ஆபத்தின்றி காலில் சுடப்பட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சுட்டுக்கொல்லப்பட்ட பெண் பின் லேடனுக்கு செய்திகள் பரிமாற்றம் செய்த சேக் அபு அஹ்மத்தின் மனைவி என்றும் சேக் அபு அஹ்மதும் கொல்லப்பட்டார் என்றும் தெரியவந்துள்ளது. பின் லேடனுடன் அவரது மகன் காலித் என்பவரும் கொல்லப்பட்டதாகவும் அவரது உடலை அமெரிக்க படையினர் கைப்பற்றி கொண்டு சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பின் லேடனின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அனைவரையுமே அமெரிக்க படையினர் தங்களோடு கொண்டு செல்ல விரும்பியதாகவும்; ஒரு ஹெலிகாப்டர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதனால் அந்த எண்ணத்தை கைவிட்டதாகவும் தெரிய வருகிறது.

பின்லேடனிடமிருந்து எதிர்ப்பேதும் இல்லையெனில் அவரை உயிருடன் பிடிக்கவே ஒபாமா உத்தரவிட்டிருந்தார். அமெரிக்க படையினரை கண்டதும் பின் லேடனின் மனைவி அவரை பெயர் சொல்லி அழைத்ததை வைத்துதான் கமாண்டோ வீரர்கள் பின் லேடனை அடையாளம் கண்டுகொண்டதாக தற்போது தெரிய வந்துள்ளது.

பின்லேடனை சரணடைய சொல்லும் அரேபிய வாக்கியங்கள் கமாண்டோ படை வீரர்களுக்கு கற்றுத்தரப்பட்டிருந்தது. இருப்பினும், அதற்க்கான வாய்ப்பு அவர்களுக்கு ஏற்படவேயில்லை.



No comments: