ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் கடந்த 30-ந்தேதி தேவர் ஜெயந்தி விழா நடைபெற்றது. அப்போது பரமக்குடி அருகே 3 பேர் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் வன்முறை சம்பவங்கள் நடை பெற்றது. இந்த நிலையில் 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்ய கோரி பல்வேறு தேவர் இன அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தி வருகிறது.
பரமக்குடியில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று சாத்தூரில் கடைகள் அடைக்கப்படும் என்று தேவர் இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று சாத்தூரில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தது. காய்கறி மார்க்கெட், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்தன.
பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம்போல் இயங்கின. பஸ் நிலையம் மற்றும் முக்கியமான இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். கிருஷ்ணன்கோவில் பகுதியிலும் தேவரின மக்கள் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இதனால் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

No comments:
Post a Comment