பசும்பொன் தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளில்
நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள் காரணமாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் பல பகுதிகளில்
இன்று பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
குறிப்பாக, கமுதி அருகே செய்யாமங்கலம் பகுதியில் பஸ்கள் மறிக்கப்பட்டதால் அந்த
வழித்தடத்தில் போக்குவரத்து முடங்கியது. கமுதி- அருப்புக்கோட்டை - விருதுநகர் பஸ்கள்
இதனால் இயக்கம் இன்றி நிறுத்தப்பட்டன.
மண்டப சாலையில் ஏற்பட்ட மறியலால் ராமேஸ்வரம் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.
மேலும், சாயல்குடி, பெருநாழி, தூத்துக்குடி வழித்தடத்திலும் மறியலால் போக்குவரத்து
முடங்கியது. முதுகுளத்தூர் வழித்தடத்திலும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இன்று காலையிலேயே கடையடைப்பு குறித்த செய்தி கேட்டவுடன், தனியார் பஸ்கள்
நிறுத்தப்பட்டன. இருப்பினும் அரசு அறிவிப்பினால், சில அரசு பேருந்துகள் காலையில்
இயக்கப்பட்டன. பின்னர் மறியல் போராட்டங்கள் ஆங்காங்கே நடந்ததால், அரசுப்
பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. இதனால், இந்தத் தலுகாக்கள் அனைத்திலும் பள்ளிகளில்
வெளியூர் மாணவர்கள் வரவில்லை. அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின. மக்களின்
இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
No comments:
Post a Comment