கடந்த அக்.30ம் தேதி தேவர் குருபூஜையை முன்னிட்டு, பரமக்குடி பகுதியில் நிகழ்ந்த
கலவரம், மற்றும் திருப்புவனம் பகுதியைச் சேந்த 3 பேர் கொலை செய்யப்பட்டதைக்
கண்டித்தும், மதுரை பெட்ரோல் குண்டு வீச்சில் 5 பேர் உயிரிழந்த சம்பவத்தைக்
கண்டித்தும் பார்வர்ட் ப்ளாக் கட்சியின் கதிரவன் பிரிவின் சார்பில் இன்று முழு
கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது. அதன்படி இன்று புதன்கிழமை
மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.
சிவகங்கை, இளையான்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
குறைந்த அளவே பஸ்கள் இயக்கப்பட்டன. இருப்பினும், அந்த பஸ்களும் காலியாகவே
சென்றன. மானாமதுரை பேருந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டது.
இதனிடையே நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இளையான்குடி செல்லும் சாலையில் உள்ள
ரயில்வே கேட் பகுதியில், மர்ம நபர்கள் சிலர், 2 பஸ்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.
இதை அடுத்து இரவு நேரத்தில் அந்தப் பகுதியில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
ராமநாதபுரத்தில் இருந்து மானாமதுரை வழியாக இயக்கப்படும் பஸ்கள் இயக்கப்படவில்லை.
மதுரை செல்லும் பஸ்களும் சிவகங்கை- மேலூர் வழியாக இயக்கப்படுகின்றன. அவையும்
பயணிகள் கூட்டம் இல்லாமல் காலியாகச் செல்கின்றன.
No comments:
Post a Comment