தேவர் குருபூஜை விழாவுக்குச் சென்றவர்கள் மீது நடைபெற்ற வன்முறை சம்பவங்களைக் கண்டித்து, தேவர் இன ஒருங்கிணைப்புக் குழு சார்பில் திருநெல்வேலியில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், மூவேந்தர் மக்கள் கழக நிறுவனர் தலைவருமான ஏ. ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.
மூவேந்தர் மக்கள் கழக தலைமை நிலையச் செயலர் சண்முகராஜா, சிவகாசியைச் சேர்ந்த சங்கரநாராயணன், தஞ்சாவூரைச் சேர்ந்த செங்குட்டுவ வாண்டையார், அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில இளைஞரணிச் செயலர் சுரேஷ், நாடாளும் மக்கள் கட்சி மாவட்டச் செயலர் எஸ். துர்க்கைலிங்கம், பசும்பொன் தேசியக் கழகத்தைச் சேர்ந்த எஸ்.வி. ராமர், வழக்குரைஞர்கள் மந்திரமூர்த்தி, கருணாநிதி, மணிகண்டன், அகில இந்திய தேவர் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஏ.எம். மூர்த்தி, முக்குலத்தோர் மறுமலர்ச்சிக் கழகத்தைச் சேர்ந்த ஏ. வேல்முருகன், தென்மண்டல தேவர் பேரவையைச் சேர்ந்த எம்.எஸ்.எம். கல்பசாம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தேவர் குரு பூஜையின்போது வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குருபூஜைக்குச் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் இந்தச் சம்பவங்களின் பின்னணியில் உள்ளவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

No comments:
Post a Comment