கடந்த 30-ந்தேதி பசும் பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா மற்றும்
குருபூஜை விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்டு விட்டு
திரும்பியவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பரமக்குடி அருகே 3 பேரும், விருதுநகர்
மாவட்டத்தில் 2 பேரும் கொல்லப்பட்டனர். மதுரை அருகே நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு
சம்பவத்தில் 6 பேர் பலியானார்கள்.
இந்த படுகொலைகளை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும்
தேவரின ஒருங்கிணைப்புக்குழு சார்பில் இன்று `பந்த்' நடைபெறும் என
அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று தென் மாவட்டங்களில் `பந்த்' தொடங்கியது.
மதுரை மாவட்டத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு
விடுமுறை அளித்து கலெக்டர் அன்சுல்மிஸ்ரா உத்தரவிட்டார்.
கிராமப்புறங்களுக்கு மதுரையில் இருந்து பஸ்கள் இயக்கப்படவில்லை. நகர் பகுதியில் 7
மணிக்கு மேல் பஸ்கள் ஓட தொடங்கின. ஆனால் `பந்த்' பீதி காரணமாக பஸ்களில்
பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. மதுரை சர்வேயர் காலனி, புதூர், மூன்றுமாவடி,
கோரிப்பாளையம், சிம்மக் கல், செல்லூர் உள்பட நகரின் பல பகுதிகளில் கடைகள்
அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.
ஆங்காங்கே ஒரு சில டீக்கடைகள் மட்டும் திறந்திருந்தன. எந்தவித அசம்பாவித சம்பவங்கள்
நடைபெறாமல் இருப்பதற்காக போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
உசிலம்பட்டியில் இன்று பஸ்கள் எதுவும் ஓடவில்லை. கடைகள் அனைத்தும்
அடைக்கப்பட்டிருந்தன. பூ மார்க்கெட், காய்கறி மார்க்கெட், ஜவுளிக்கடைகள் உள்பட
அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
ஆட்டோ, கார், வேன்கள் ஓடவில்லை. பஸ்கள் எதுவும் ஓடாததால் உசிலம்பட்டி பஸ்
நிலையம் வெறிச் சோடி காணப்பட்டது. உசிலம்பட்டியிலுள்ள தேவர் சிலை முன்பு
இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர்
மாவட்டத்தில் விருதுநகர், ராஜபாளையம், சிவகாசி ஆகிய பகுதிகளில் ஒரு சில கடைகள்
அடைக்கப்பட்டிருந்தன.
சாத்தூரில் கடைகள் திறந்திருந்தன. ஆனால் தனியார் மற்றும் அரசு பஸ்கள் எதுவும்
ஓடவில்லை. கார், ஆட்டோக்களும் ஓடவில்லை. விருதுநகரில் காலை 7 மணிக்கு மேல்
அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின. ராஜபாளையத்தில்
ஆவாரம்பட்டி, திரவுபதி அம்மன் கோவில் தெரு, சம்பந்தபுரம் ஆகிய பகுதிகளில் கடைகள்
அடைக்கப்பட்டிருந்தன.
புழக்கத்தில் இல்லை.
சிவகாசியில் இன்று அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தது. டீக்கடைகள் கூட
திறக்கப்படவில்லை. காய்கறி மார்க்கெட் மூடப்பட்டிருந்தது. பஸ், ஆட்டோக்கள்
வழக்கம்போல் ஓடின. இதேபோன்று ராமநாதபுரம் மாவட்டம் சிவகங்கை மாவட்டங்களிலும்
கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்கள் வழக்கம் போல் ஓடின. பல பகுதிகளில் இயல்பு
வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
No comments:
Post a Comment