டேம் 999 திரைப்படத்தைத் தமிழக அரசு தடைவிதித்ததை எதிர்த்து அதன் இயக்குநரால் தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அது நேற்று உச்சநீதிமன்றம் வந்த போது தன் கருத்தைத் தெரிவித்த நடுவண் அரசின் வழக்கறிஞர் ‘எந்த ஒரு திரைப்படத்தையும் திரையிடத் தணிக்கை குழு ஒப்புதல் அளிக்கும் போது அதைத் தடை செய்ய எந்த மாநிலத்திற்கும் உரிமை இல்லை’ என்றார். அந்தக் கருத்திற்கு இப்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவிக்கும் போது,
தமிழக அரசுடன் கலந்து பேசி, இரு மாநில மக்களுக்கு இடையே பிரச்சனை ஏதும் ஏற்படா வண்ணம் வாக்குமூலம் தாக்கல் செய்யாமல், பிரச்சனையை உண்டாக்கும் நோக்குடன் மத்திய அரசு வழக்குரைஞர் வாதிட்டிருப்பது கண்டனத்திற்குரிய செயலாகும்.
டேம் 999 திரைப்படம் தயாரிக்கப்பட்ட நோக்கத்தையும், அதன் பின்னணியில் உள்ள கேரள அரசின் சதித் திட்டத்தையும் சரியாகப் புரியவைக்க மத்திய அரசு தவறும் காரணத்தினால், அத்திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்கு தமிழக அரசு விதித்துள்ள தடையை உச்ச நீதிமன்றம் நீக்குமானால், அதனால் ஏற்படும் விளைவுகள் அனைத்திற்கும் மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியுள்ளார்
No comments:
Post a Comment