மதுரை :ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கான டெபாசிட் பணத்தை அரசு ஏற்க வலியுறுத்தி மதுரையில் மாடுபிடிவீரர்கள் ஊர்வலம் சென்றனர். ஜல்லிக்கட்டு விளையாட்டை சுப்ரீம் கோர்ட் நிபந்தனைகளுடன் நடத்த அரசு அனுமதித்துள்ளது. நிகழ்ச்சியை நடத்துவோர், டெபாசிட் ரூ. 2 லட்சம் செலுத்த வேண்டும். மாடுகளை பிராணிகள் நலவாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் உட்பட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
மதுரை உட்பட சுற்றியுள்ள ஆறு மாவட்டங்களை சேர்ந்த மாடுபிடி வீரர்கள், மாடு உரிமையாளர்கள், ஆர்வலர்கள் ஊர்வலத்தில் ஈடுபட்டனர். தெப்பக்குளத்திலிருந்து வீரவிளையாட்டு பேரவை தலைவர் பி.ராஜசேகரன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலம் வந்து மனு கொடுத்தனர்.
அவர்கள் கூறுகையில், ""டெபாசிட் ரூ. 2 லட்சத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது அரசு ஏற்க வேண்டும். மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் பட்டியலில் 5 கிராமங்கள் உள்ளன. 37 கிராமங்களில் நிகழ்ச்சி நடக்கிறது.
அனைத்து ஊர்கள் மட்டுமின்றி பிறமாவட்டங்களிலும் நடத்த அனுமதிக்க வேண்டும். காளைகளை பிராணிகள் நல வாரியத்தில பதிவு செய்வதில் உள்ள சட்ட சிக்கல் குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.
No comments:
Post a Comment