மிழகத்துக்கு அகதிகளாக வந்த இலங்கைத் தமிழர்களை சிறையில் அடைத்தது தவறு என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
இலங்கையின் வட பகுதியிலுள்ள புங்குடு தீவில் பிழைப்பிற்கு வழியின்றி புதுக்கோட்டை மாவட்டம், ஜகதாபட்டினம் கடற்கரையில் அகதிகளாக வந்திறங்கிய ஈழத் தமிழ்ச் சொந்தங்களை நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைத்திருப்பது மனிதாபிமானமற்ற நடவடிக்கையாகும்.
தான் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்துவரும் நாட்டில் தனது உயிருக்கும், உரிமைகளுக்கும் அச்சுறுத்தல் உள்ளது என்று கருதி, வேறொரு நாட்டிற்கு அடைக்கலம் தேடி வருபவர்கள் அகதிகளாக ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு பாதுகாப்பையும், மனிதாபிமான உதவிகளையும் செய்ய வேண்டும் என்று ஐ.நா.வின் மனித உரிமைப் பிரகடனம் வலியுறுத்துகிறது. 1948ஆம் ஆண்டில்
ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐ.நா. மனித உரிமைப் பிரகடனத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால், அந்த பிரகடனத்திற்கு எதிராக, மனிதாபிமானமற்ற வகையில் தமிழக காவல் துறை செயல்ப்பட்டுள்ளது.
காவல் துறையின் இந்த நாகரீகமற்ற நடவடிக்கையை தமிழக அரசு தடுத்தி நிறுத்தி சிறையில் அடைக்கப்பட்ட நம் சொந்தங்கள் 8 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
இவ்வாறு சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment