Tuesday, January 24, 2012

பாரதிராஜாவின் துணிச்சல்

காலம்காலமாக முதலாளி வர்க்கம்தான் தங்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நியாயமான கூலியை முடிவு செய்வார்கள். ஆனால் சினிமா உலகில் அப்படியல்ல, தொழிலாளர்கள்தான் தங்களது கூலியை நிர்ணயிக்கிறார்கள். அதோடு எங்களுக்கு இந்த அளவு சம்பளம் தர வேண்டும் இல்லையேல் படப்பிடிப்பே நடத்த முடியாது என்றும் மிரட்டல் விடுக்கிறார்கள். அதோடு மட்டுமா? ஒரு படத்துக்கு தேவையான தொழிலாளர்களை மட்டுமே பயன்படுத்திக்கொள்ளவும் தயாரிப்பாளர்களுக்கு உரிமை இல்லை. கண்டிப்பாக இத்தனை தொழிலாளர்களை தேவையே இல்லையென்றாலும் அழைத்து செல்ல வேண்டும். உரிய சம்பளத்தை வழங்க வேண்டும். இதெல்லாம் நீண்டகாலமாக பெப்சி அமைப்பு என்கிற பெயரில் தமிழ்த்திரையுலகில் நடந்து வரும் ஒரு அமைப்பின் அதிகாரம்.

இத்தனை காலமும் பல்லைக்கடித்துக்கொண்டு சகித்து வந்த தயாரிப்பாளர் சங்கம் தற்போது விழித்துக்கொண்டுள்ளது. வீட்டை அடமானம் வைத்து, சொத்துக்களை விற்று நாங்கள் படமெடுக்கிறோம். லாப நஷ்டங்களுக்கு நாங்களே பொறுப்பு ஏற்கிறோம். அதோடு மட்டுமின்றி உலகில் எந்த தொழிலாளர்களுக்கும் இல்லாத வகையில் மூன்று வேளையும் சாப்பாடு தருகிறோம். இப்படி தேவையானதை செய்து வேலை கொடுத்தால் எங்களை மிரட்டுவதா? என்று சிலிர்த்தெழுந்து விட்டனர்.

இந்த விசயத்தை பொறுத்தவரையில் , நேற்று கூடிய தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அதிரடி முடிவு காரணமாக பெப்சி அமைப்பானது கடும் அதிர்ச்சியில் ஆடிப்போயிருக்கிறது. காரணம், இனி பெப்சிக்கும், எங்களுக்குமிடையேயான ஒப்பந்தம் தொடராது. நாங்கள் விருப்பம் போல் யாரை வைத்து வேண்டுமானாலும் படப்பிடிப்பை நடத்திக்கொள்வோம் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இந்நிலையில் அறுபது சதவீதம் ஊதிய உயர்வு கேட்டு மிரட்டி வந்த பெப்சி அமைப்பும் இன்று கூடியுள்ளது. இதில் இதுசம்ப்நதமான தாங்கள் நீதிமன்றத்தை நாடுவதாக அவர்கள் முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால் எந்தமிரட்டலுக்கும் அஞ்சாத பாரதிராஜா, அன்னக்கொடியும் கொடிவீரனும் படப்பிடிப்பை பெப்சி தொழிலாளர்கள் இலலாமல், தனக்கு தேவையான நபர்களை வைத்து அழகாக படப்பிடிப்பை நடத்தி வருகிறார். பாரதிராஜாவின் இந்த துணிச்சல் இபபோது மேலும் சில தயாரிப்பாளர்களுக்கும் வரத தொடங்கியிருக்கிறது.

No comments: