பாரதிராஜா போன்றவர்கள் காங்கிரஸில் இணைய வேண்டும் என்று அக்கட்சியின் தமிழகத் தலைவர் ஞானதேசிகனும், சுதர்சன நாச்சியப்பன் எம்பியும் கோரிக்கை விடுத்தனர்.
முன்னதாக புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பாரதிராஜா பேசியதாவது:
நான் தீவிர காங்கிரஸ்காரன். காங்கிரஸுக்காக மேடையில் ஏறி தேர்தல் பிரசாரம் செய்திருக்கிறேன். என் தாயின் நகைகளை விற்று காங்கிரஸுக்காக என் தந்தை பாடுபட்டுள்ளார். நேரு போன்ற பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தில் இன்று சோனியா தலைவராக இருக்கிறார். இதனால் காங்கிரஸில் எனக்கு கருத்து வேறுபாடுகள் உண்டு. அந்த கருத்து வேறுபாடு அப்பா- அம்மா, அண்ணன்-தம்பிக்கு இடையேயான கருத்து வேறுபாட்டைப் போன்றது நான் கலைஞனாகவே இருக்க விரும்புகிறேன் என்றார்.
இந்த புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பேசுகையில், தமிழகத்தில் எந்த இயக்கத்திற்கும் காங்கிரஸ் சளைத்தது அல்ல. பெரியார் பிரச்னையாகட்டும், மீனவர் பிரச்னையாகட்டும், அணுமின் நிலையமாகட்டும். தமிழக மக்களின் நலனுக்காக காங்கிரஸ் போராடும்.
வருகிற பிப்ரவரி 4-ம் தேதி திருநெல்வேலியில் கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் என்றார்.
பின்னர் பேசிய ஞானதேசிகனும், சுதர்சன நாச்சியப்பன் எம்பியும் பாரதிராஜா போன்றவர்கள் காங்கிரஸில் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்தனர்
No comments:
Post a Comment