Monday, January 23, 2012

Netaji Subhash Chandra Bose Birthday January 23-1-2012 - Jayanti Subhash Chandra Bose - Jan 23rd 2012 Subhash Chandra Bose 116th Birth Anniversary Jayanthi

Netaji Birthday:
Netaji Subhash Chandra Bose 116th birthday is on January 23 2012 (Monday). Netaji took birth on Jan 23, 1897 at Cuttack, Orissa.


Subhas Chandra Bose was initially with Congress and even served as the party President twice. Netaji then started All India Forward Bloc as he believed Gandhiji's non-violence is not sufficient to root out British. He was sent to jail 11 times by British Empire.





His famous quote "Give me blood and I will give you freedom" inspired many to join Azad Hind Fauj i.e., Indian National Army (INA) to fight British Empire and secure freedom.


INA, started at Singapore, made great progress and set foot on Indian Soil on March 18 ,1944 after crossing the Burma Border. There is contradiction on the belief that Netaji died in a plane crash at Taiwan on 18 August 1945



நெஞ்சில் நிறைந்த நேதாஜி:இன்று பிறந்த நாள்

இந்திய தேசத்தின் விடுதலைக்கு வித்திட்ட தலைவர்களில் நேதாஜி என அழைக்கப்படுபவர் சுபாஷ் சந்திரபோஸ். நேதாஜி என்றால் இந்தியில் (respectable leader) மரியாதைக்குரிய தலைவர் என பொருள்.அந்த மரியாதைக்குரிய ஒப்பற்ற தலைவரின் 115-வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

சுதந்திரத்திற்காக பாடுபட்ட ஒப்பற்ற தலைவர்களி்ல் நேதாஜியின் பங்கினை மறக்கமுடியாது. வரலாற்றில் மறைக்கவும் முடியாது. 1897-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி ஒடிசாவின் , கட்டாக்கில், ஜானகிநாத் போஸ், பிரபாவதிதேவி தம்பதியருக்கு 9-வது மகனாக பிறந்தார் சுபாஷ் சந்திரபோஸ், படிப்பில் சுறுசுறுப்புடன் விளங்கினார். மேல்படிப்பிற்காக இங்கிலாந்துக்கு சென்று. அங்கு பிரிட்டீஸ் அரசுப்பதவிக்காக ஐ.சி.எஸ். (indian civil service ) (இன்றைய படிப்பான ஐ.ஏ.எஸ் ) படிப்பினை கற்றார். எனினும் பிரிட்டீஸார் வழங்கிய அரசுப்பதவி, பட்டத்தை உதறி விட்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
1938-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் காந்தியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடினால் பிரிந்து, 1939-ம் ஆண்டு அகிலஇந்திய பார்வர்டுபிளாக் கட்சியை துவக்கினார். இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டீஸ் அரசுக்கெதிராக இந்திய தேசிய ராணுவத்தினை ஏற்படுத்தினார். ‘தனது ராணுவத்தில் லட்சக்கணக்கான இளைஞர்களை திரட்டினார். ‘ ஜெய்ஹிந்த்’ என்ற முழக்கத்துடன் பிரிட்டீஸாரை எதிர்த்து போர் தொடுத்தார்.

கடந்த 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி தைவான் சென்ற விமான விபத்தில் சுபாஷ் சந்திர போஸ் இறந்ததாக கூறப்படுகிறது. எனினும் இவரது மரணம் குறித்த மர்மம் இன்று வரை நீடிக்கிறது. இவரது மரணம் குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

இவரது மரணம் குறித்து விசாரிப்பதற்காக 1956-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், முன்னாள் பிரதமர் நேரு ஆட்சியின் போது ‘ஷாநவாஸ்’ கமிஷனும், 1970-ம் ஆண்டு ஜூலை மாதம் முன்னாள் பிரதமர் இந்திரா ஆட்சியின் போது ‘கூஸ்லா’ கமிஷன், 1999-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியின் போது , ‘முகர்ஜி கமிஷன்’ , என மூன்று கமிஷன்கள் நியமிக்கப்பட்டது. இதில் முகர்ஜி கமிஷன் அறிக்கை 2006-ம் ஆண்டு மே 17-ம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அதில் நேதாஜி மரணம் குறித்து தெளிவான முடிவுக்கு வரவில்லை.

இந்நிலையில் ஜப்பானில் உள்ள ரேங்கூஜி நகர் அருங்காட்சியகத்தில் இவரது அஸ்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த அஸ்தி நேதாஜியினுடையது இல்லை எனவும் கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சுதந்திர ‌போராட்ட வரலாற்றில் நீங்காத இடம் பெற்ற ‌நேதாஜி இந்தியர்களின் நெஞ்சில் என்றும் நிறைந்துள்ளார்.

No comments: