மதுரையில் மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் பை–பாஸ் ரோட்டில் உள்ள சந்திரிகா பழனியப்பன் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கட்சியின் நிறுவனத்தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆண்டாண்டு காலம் தொடர்ந்து நடந்து வரும் தேவர் ஜெயந்தி அஞ்சலி நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவையும், புதிய விதிமுறைகளின் கட்டுப்பாடுகளையும் நீக்க வேண்டும். மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயரை சூட்ட வேண்டும். சாதிவாரியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு முடிவை வெளியிட்டு அந்தந்த சாதி சதவீத அடிப்படையில் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் ஸ்ரீதர் வாண்டையார் நிருபர்களிடம் கூறியதாவது:–
பசும்பொன் நகரில் பல ஆண்டுகளாக தேவர் ஜெயந்தி விழா நடைபெற்று வருகிறது. பல்வேறு அரசியல் தலைவர்கள் அங்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பசும் பொன்னுக்கு அஞ்சலி செலுத்த செல்வோருக்கு புதிய விதிமுறைகளும் மாவட்ட நிர்வாகம் விதித்துள்ளது. இதனால் பசும் பொன்னுக்கு சென்று தேவர் ஜெயந்தியை அனைவராலும் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பசும்பொன் முத்துராமலிங்கதேவர் ஒரு தேசிய தலைவர் அவருக்கு அஞ்சலி செலுத்த முடியாதபடி தடை விதித்திருப்பது வேதனையாக உள்ளது. எனவே 144 தடை உத்தரவை ரத்து செய்து வழக்கம்போல் நடைபெறும் முளைப்பாரி, ஊர்வலம், தொடர்ஜோதி ஓட்டம், பேரணி, வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி வழங்க வேண்டும்.
இல்லை என்றால் முக்குலத்தோர், மூவேந்தர் முன்னேற்ற கழக தொண்டர்கள் என 10 லட்சம் பேரை திரட்டி வருகிற 30–ந்தேதி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு எனது தலைமையில் அங்கிருந்து பசும்பொன்னுக்கு நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறோம். நாங்கள் வழக்கமாக நடத்தி வரும் அன்னதான நிகழ்ச்சியும் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பொது செயலாளர் செல்வராஜ், இணை தலைவர்கள் ரவி வாண்டையார், ஆறுமுக நாட்டார், இணை பொது செயலாளர் ரவீந்திரன், துணைத்தலைவர் வக்கீல் சுரேஷ், மதுரை மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டன
No comments:
Post a Comment