USEFUL BLOG FOR ALL MUKKULATHORS AND INFORMATIONS REGARDING MUTHURAMALINGA THEVAR, ACTOR KARTHIK - AINMK,OTHER THEVAR(DEVAR)PERSONALITIES....ALONG WITH IMPORTANT NATIONAL AND INTERNATIONAL NEWS AND HAPPENINGS.Website which link the Thevar community around the world
Thursday, October 17, 2013
144 தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி தேவர் நினைவிடத்தில் சாகும் வரை உண்ணாவிரதம்.
144 தடை உத்தரவை ரத்துசெய்யக் கோரி, பசும்பொன் தேவர் நினைவிடத்தில், தேவரின சமூகத்தினர் திடீரென சாகும் வரை உண்ணாவிரதத்தை, புதன்கிழமை தொடங்கினர்.
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் அக்டோபர் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்டோபர் 30இல் நடைபெறும் பசும்பொன் தேவர் 106ஆவது ஜயந்தி விழா மற்றும் 51ஆவது குருபூஜை விழாவுக்கு வாடகை வாகனங்களில் வரக் கூடாது என பல விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இவற்றை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும் என்று தேவரின கட்சிகள் மற்றும் பல அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையே கமுதி, முதுகுளத்தூர், கடலாடி ஆகிய தாலுகாக்களைச் சேர்ந்த தேவரினக் கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த 75-க்கும் மேற்பட்டோர் புதன்கிழமை கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிட மணிமண்டபத்துக்கு வந்தனர்.
தடை உத்தரவு நீக்கம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கியிருப்பதாக அவர்கள் அறிவித்து அங்கு அமர்ந்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் கமுதி உதவி காவல் கண்காணிப்பாளர் வி.விக்ரமன், வட்டாட்சியர் சி.இந்திரவள்ளி, காவல் ஆய்வாளர் வை.ஆனந்தன் மற்றும் போலீஸார் பசும்பொன்னுக்கு விரைந்தனர். உண்ணாவிரதம் இருப்போரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக் கொண்டனர். ஆனால், உண்ணாவிரதப் போராட்டத்தை அவர்கள் கைவிட மறுத்துவிட்டனர்.
.
NOTE : WE SHOULD NOT ALLOW ANY POLITICAL OUTFITS ESPECIALLY ADMK AND DMK TO ENTER INTO PASUMPON ON JEYANTHI...ONLY OUR COMMUINNTY LEADERS SHOULD BE ALLOWED...THIS WILL TEACH THEM A BIG LESSON.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment