அப்பா மாதிரி அரசியலுக்கெல்லாம் வருவதற்கில்லை என்று கௌதம் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
கடல் படத்திற்குப் பிறகு கௌதம் கார்த்திக் நடிக்கும் படம் ‘என்னமோ ஏதோ’. தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற ‘அலா மொதலயிந்தி’ என் படத்தின் ரீமேக்தான் இந்த படம். ரவி பிரசாத் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரவி தியாகராஜன் இயக்குகிறார். இதில் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்.
மேலும் பிரபு, நிகிஷா பட்டேல், அழகம் பெருமாள், மதன் பாப், மனோபாலா, அனுபமா குமார், சுரேகா வாணி, புதுமுகம் சுரேஷ் மற்றும் பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள். இமான் இசையமைப்பில் மதன் கார்க்கி பாடல்களை எழுதுகிறார். இன்னும் 2 பாடல்கள் மட்டுமே பாக்கி. அத்துடன் படப்பிடிப்பு நிறைவடைகிறது. இப்பாடல் காட்சிகள் பாங்காங்கில் படமாக்கப்பட உள்ளன.
இந்நிலையில் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு ரவி பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. அதில் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு கௌதம் கார்த்திக் பின்வருமாறு பதிலளித்தார். உங்க அப்பா மாதிரி நீங்களூம் அரசியலுக்கு வருவீங்களா...!?
சத்தியமா வரமாட்டேன். நம்மல சுத்தி இருக்குறவங்களுக்கு உதவி செஞ்சாலே போதும் இந்த அரசியல் பொது சேவை இதெல்லாம் எனக்கு வேண்டாம் சார்...
நடிகைகள் கூட எப்படி நடிக்கனும்னு கார்த்தி சொல்லியிருக்காரா?
ஒரே ஒரு விஷயம் சொன்னார், எதுக்கும் பயப்படாத தைரியமா க்ளோசா நடிக்கனும்னு சொன்னாரு.
படப்பிடிப்புக்கு உங்க ப்ரண்ட்ஸ் 4 பேரை கூட்டிட்டு வந்து தயாரிப்பாளர்க்கு அதிக செலவு வைக்கிறதா சொல்றாங்களே?
இந்த கேள்விக்கு தயாரிப்பாளர் ரவிபிரசாத் பதிலளித்தார். படப்பிடிப்பு அவர் கூட்டிட்டு வர்றது ஒரே ஒரு நண்பரை தான், அவரும் இவருக்கு உதவி செய்ய அடுத்த ஷாட்டுக்கு யூனிட்டில் ஹெல்ப் பண்ணதான் வர்றாரு. மற்றபடி நீங்க சொல்ற மாதிரி எதுவும் இல்ல.
கடல் படத்துக்கும் இந்த படத்துக்கும் உங்க எதிர்பார்ப்பு எப்படி இருக்கு?
கடல் படத்துக்கு எந்தளவுக்கு எதிர்பார்ப்பு இருந்திச்சோ அந்த அளவுக்கு இந்த படத்திலும் இருக்கு, ஆனா கடல் படம் ஓடலன்னு சொல்றாங்க எனக்கு அந்த படம் ரொம்ப புடிச்சது நான் விரும்பின மாதிரி படம் இருந்திச்சு...என்றார்.
.
No comments:
Post a Comment