சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த அரை இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டிரினிடாட்டை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதில் சச்சின் டெண்டுல்கர் 31 பந்துகளை எதிர்கொண்டு 35 ரன்கள் அடித்தார். இதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் 50000 ரன்களைத் தாண்டிய முதல் ஆசிய வீரர் என்ற பெருமையையும், உலக அளவில் இந்த சாதனையை நடத்திய 16 ஆவது வீரர் என்ற புகழையும் அவர் பெற்றார்.
40 வயதான டெண்டுல்கர் 551 லிஸ்ட் ஏ மேட்சுகள், 307 முதல்தர போட்டிகள், 95 டி-20 போட்டிகள் சேர்த்து மொத்தம் 953 போட்டி மேட்சுகளில் விளையாடியதன் மூலம் இந்த சிறப்பினைப் பெறுகின்றார். இந்தப் போட்டிகளில் விளையாடியதன் மூலம் அவர் பெற்றுள்ள மொத்த ரன்களின் எண்ணிக்கை 50009 ஆகும்.307 முதல்தர போட்டிகளில் 25,228 ரன்களும், 198 டெஸ்ட் போட்டிகளில் 15,837 ரன்களும் இவர் அடித்துள்ளார்.551 லிஸ்ட் மேட்சுகளில் 21,999 ரன்கள் எடுத்தள்ள சச்சின் அவற்றில் தான் விளையாடிய 463 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் 18,426 ரன்கள் அடித்துள்ளார். இதற்கு முந்தைய 94 போட்டிகளில் 2747 ரன்கள் பெற்றிருந்த சச்சின் இந்தப் போட்டியில் 26 ரன்கள் பெற்றபோது 50000 ரன்கள் சாதனையைப் பூர்த்தி செய்தார்.
இதன்பின்னர் தனது அடுத்த சாதனையாக 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும் அவர் விரைவில் விளையாட இருக்கும் மேற்கிந்தியத் தீவுகளுடனான போட்டித் தொடரில் நிறைவேற்றக் கூடும்.
No comments:
Post a Comment