சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருதுபாண்டியர்களின் 212ஆவது நினைவுநாள் தமிழக அரசு சார்பில் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலர் வைகோ அஞ்சலி செலுத்தினர்.
இந்தியாவின் விடுதலைக்கு முதல் போர் பிரகடணம் செய்து, நாட்டிற்காக இன்னுயிர் நீத்தவர்கள் மாமன்னர் மருதுபாண்டியர்கள். இவர்களின் 212ஆவது நினைவுநாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. அவர்களின் நினைவு மணி மண்டபத்தில் வாரிசுதாரர்கள் சார்பில் குருபூஜை நடைபெற்றது.
குடிசை மாற்று வாரியத் தலைவர் கு.தங்கமுத்து, வீட்டுவசதி வாரியத் தலைவர் முருகையா பாண்டியன், கூட்டுறவு சங்கங்களின் மாநிலத் தலைவர் கே.கே.உமாதேவன்,பேரூராட்சித் தலைவர் ஆர்.சோமசுந்தரம், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ஏ.வி.என்.கஸ்தூரிநாகராஜன், வட்டாட்சியர் ஜெயராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வைகோ அஞ்சலி: அதன்பிறகு,மதிமுக சார்பில் அதன் பொதுச் செயலர் வைகோ, மாவட்டச் செயலர் செவந்தியப்பன், மாநில தணிக்கைக்குழு உறுப்பினர் கார்கண்ணன், மாவட்ட இளைஞரணி செயலர் பாண்டியராஜன் உள்ளிட்டோர் மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
தி.மு.க. சார்பில் ஒன்றியச் செயலர் செழியன், நகரச் செயலர் கார்த்திகேயன், முன்னாள் பேரூராட்சித் தலைவர் சாக்ளா, இளைஞரணி கே.எஸ்.நாராயணன் உள்ளிட்டோரும், காங்கிரஸ் சார்பில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சுப்புராம், ராமஅருணகிரி, வட்டாரத் தலைவர் எஸ்.எம்.பழனியப்பன், ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கூத்தகுடி சண்முகம், மாநிலச் செயலர் ஸ்டாலின், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் சார்பில் மாவட்டத் தலைவர் ஹைதர்அலியும் மேலும், அகமுடையார் சங்கத்தினர், பாஜக,
நாம்தமிழர் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்
No comments:
Post a Comment