தேவர் குருபூஜையை முன்னிட்டு பசும்பொன் பகுதியி்ல் 2 தாற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அக்.30-ந் தேதி பசும்பொன் தேவரின் 51-வது குருபூஜையும், தமிழக அரசு சார்பில் 106-வது ஜெயந்தி விழாவும் நடைபெற உள்ளன. இந்த விழாக்களுக்கு வாடகை பஸ். மினி பஸ், வேன், கார், ஜீப் போன்ற வாகனம் மற்றும் லாரி, மினி லாரி, டிராக்டர் ஆட்டோ, பைக் எதிலும் பசும்பொன்னுக்கு வரவே கூடாது என்று மாவட்ட நிர்வாகம் கடும் கட்டு்ப்பாடு விதித்துள்ளது. அதே சமயம் அரசு பஸ்களில் அந்தந்த மாவட்டங்களில் இருந்து பசும்பொன்னுக்கு வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பசும்பொன்னுக்கு மேற்கு மற்றும் தெற்குப் பகுதி ஊர்களில் இருந்து கமுதி, மற்றும் கமுதி-கோட்டைமேடு வழியாக வரும் பஸ்கள் அனைத்தும் கோட்டைமேட்டில் உப மின் நிலையம் எதிர்ப்பகுதி மைதானத்தில் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்டுகிறது.
இதே போன்று பசும்பொன்னுக்கு கிழக்கு, வடக்கு பகுதி ஊர்களில் இருந்து அபிராமம் வழியாக வரும் பஸ்கள் அனைத்தும், நந்திசேரி விலக்கு சாலை எதிரே உள்ள மைதானத்தி்ல் நிறுத்த ஏற்பாடு செய்யப்படுகிறது.
கமுதி வழியாக வரும் அனுமதிக்கப்பட்ட சொந்த வாகனங்களை, பசும்பொன் பகுதி நுழைவு வாயி்ல் அருகே எதிர்ப்புற மைதானத்திலும், அபிராமம் வழியாக வரும் அனுமதிக்கப்பட்ட சொந்த வாகனங்களை பசும்பொன் கிழக்கு நுழைவு வாயி்ல் அருகே எதிர்ப்புற மைதானத்திலும் நிறுத்த ஏற்பாடு செய்யப்படுகிறது.
இந்த அடிப்படையி்ல் அனுமதிக்கப்பட்ட எந்த வாகனத்தில் பசும்பொன்னுக்கு வந்தாலும், குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் வாகனங்களை நிறுத்தி விட்டு நடந்துதான் பசும்பொன் தேவர் நினைவிடத்திற்குச் செல்ல வேண்டும்.
அதேநேரம் அனுமதிக்கப்பட்ட வி.ஐ.பி.களின் குறைந்தபட்சம் 3 கார்கள் தான் பசும்பொன்னுக்குள் கிழக்குப் பகுதி நுழைவு வாயி்ல் வழியாகச் சென்று, மேற்கு நுழைவு வாயில் வழியாக வெளியேற வேண்டும். தற்காலிக பஸ் நிலையங்கள், அனுமதிக்கப்பட்ட சொந்த வாகனங்கள் நிறுத்துமிடங்கள் ஏறபாடு பணிகளில் மாவட்ட ஆட்சியர் கந்தகுமார் ஆலோசனையில் பேரூராட்சி செயல் அலுவலர்கள் ஏ.தனபால் (கமுதி), ஆர்.ராஜாராம் (அபிராமம்) மற்றும் கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் முத்து இளங்கோவன் (வ.ஊ), வீரராகவன் (கி.ஊ) உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
.
No comments:
Post a Comment