Sunday, August 7, 2011

18-ந் தேதி நள்ளிரவு முதல் லாரிகள் ஓடாது

சென்னை: டீசல் விலை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வரும் 18-ம் தேதி முதல் நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என லாரி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா கூறுகையில்,
மத்திய அரசுக்கும், லாரி உரிமையாளர்களுக்கும் 4.12.2010-ல் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும், டீசல், டயர் உதிரி பாகங்கள் விலை உயர்வை குறைக்க வேண்டும், 1997-ல் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் உள்ளவாறு வாகன வகை, சுங்க கட்டணத்தை வசூலிக்க வேண்டும், தனியார் மூலம் சுங்கவரி வசூல் செய்வதை நிறுத்த வேண்டும், சரக்கு இல்லாமல் காலியாக செல்லும் வாகனங்களுக்கு 25 சதவீத சுங்கவரி மட்டுமே வசூல் செய்ய வேண்டும்.
போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 18-ந் தேதி நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய உள்ளோம். அதற்கு முன்பாக வரும் 9-ம் தேதி எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. எங்கள் கோரிக்கைகளை ஏற்பதாக எழுத்துப்பூர்வமாக மத்திய அரசு வாக்குறுதி அளித்தால் மட்டுமே வேலை நிறுத்த த்தை கைவிடுவோம் என சண்முகப்பா உறுதிபட தெரிவித்துள்ளார்.

No comments: