Tuesday, August 16, 2011

பாரதிராஜாவின் புதிய இசைக்கூட்டணி!

தான் புதிதாக இயக்கும் படத்திற்கு ஜி.வி.பிரகாஷை இசையமைப்பாளராக நியமித்திருக்கிறார் பாரதிராஜா.

தான் இயக்குனரான ஆரம்ப காலம்தொட்டு இளையராஜாவைத்தான் தனது படங்களுக்கு இசையமைக்க வைத்து வந்தார் பாரதிராஜா. ஆனால் கருத்தம், கிழக்கு சீமையிலே படங்களில் அவர்களது கூட்டணி பிரிந்து, பின்னர் ஏ.ஆர்.ரகுமானை தனது படங்களுக்கு இசையமைக்க வைத்தார் பாரதிராஜா.

இந்நிலையில் அவர் புதிதாக இயக்கவிருக்கும் அன்னக்கொடியும், கொடிவீரனும் படத்தில் மீண்டும் இளையராஜாவுடன் பாரதிராஜா இணைவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இப்போது பார்த்தால் இளையராஜாவும் இல்லை, ரகுமானும் இல்லை. ஜி.வி.பிரகாஷை தனது படத்துக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறார் பாரதிராஜா. அப்படத்துக்கான பாடல் கம்போஸிங்கும் தொடங்கி விட்டது.

No comments: