நூலகம் என்றவுடன் பலரும் கற்பனை பண்ணுவது வேறு. ஆனால் www.noolaham.org என்ற இந்த எண்ணிம நூலகம் என்பது வேறு. தகவல் வளங்களை எண்ணிம (digital) வடிவத்தில் கொண்டுள்ள, www.noolaham.org எனும் இணையத்தள முகவரியில் இயங்கும் இந்த நூலகம், தமிழில் சமகால அறிவு பகிரப்படும் மிக முக்கிய இணையத் தளங்களில் ஒன்றாகவுள்ளது.
இந்நூலகத்தில் எமது வரலாறு, இலக்கியம், மொழி, பண்பாடு, சமயங்கள், கலைகள், நாட்டார் வழக்காறுகள் உள்ளிட்ட அனைத்தும் ஆவணப்படுத்தப்படுவதுடன், அழியும் நிலையிலுள்ள எழுத்தாவணங்கள் அடுத்த தலைமுறைகளுக்கும் கிடைக்கும் வண்ணம் பாதுகாக்கப்படுகின்றன.
இந்நிலையில் இந்த எண்ணிம நூலகம் குறித்து மேலும் தகவல்களைப் பெறுவதற்காக இந்நூலக முயற்சியில் முக்கிய பங்காற்றிவரும் சசீவன் கணேசானந்தனை பொங்குதமிழ் சார்பாகச் சந்தித்தோம்.
தற்போது பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் இவர், சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் ஒரு திட்டப் பணியான 'தகவல் தொழில்நுட்பத்தின் ஊடாக ஆசியாவில் இளைஞர்களின் அரசியல் ஈடுபாடு' என்ற தலைப்பில் ஆராய்ச்சியினை மேற்கொண்டு வருகின்றார். இவர் ஆய்வு மற்றும் பகுப்பாய்வுச் செயற்பாட்டிற்கான மையத்தினதும், நூலகம் ’பவுண்டேசனினதும்’ தலைமை நிர்வாகியாகவும் செயற்பட்டு வருகின்றார். இவருடன் இந்த எண்ணிம நூலகம் குறித்து உரையாடினோம்.
மேலும்:
http://ponguthamil.com/mugangal-nirangal/mugangalnirangalcontent.asp?sectionid=3&contentid={3DC9EC55-6198-45C7-8603-E5B1C6767A08}
No comments:
Post a Comment