இயக்குனர் இராம.நாராயணனின் மனைவி இன்று திடீரென மரணம் அடைந்தார்.
தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராக இருந்தவர் டைரக்டர் இராம.நாராயணன். இவரது மனைவி இராம.ஆச்சி. இவருக்கு 52 வயதாகிறது. இவர் இன்று சென்னையில் திடீரென மரணம் அடைந்தார்.
சேதியறிந்து, திமுக தலைவர் மு.கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து தமிழ் திரையுலகத்தைச்சேர்ந்த ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment