Thursday, August 18, 2011

பாரதிராஜா படத்தில் நடிக்கிறார் பார்த்திபன்!

பாரதிராஜா இயக்கும் புதிய படத்தில் நடிக்க பார்த்திபனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சிறிய இடைவேளைக்குப்பிறகு பாரதிராஜா இயக்கும் படம் அன்னக்கொடியும் கொடி வீரனும். இந்த படத்தில் நடிப்பதற்கு வழக்கம்போலவே புதுமுக நடிகை தேர்வு செய்து வருகிறார் பாரதிராஜா. அவர் படம் என்பதால் தென்னிந்தியா முழுவதிலுமிருந்து புதுமுகங்களில் படையெடுப்பும் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் தனது படத்தில் நடிப்பதற்காக பார்த்திபனுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் பாரதிராஜா. படத்தில் தனக்கு எந்தமாதிரி வேடம் என்று எதுவும் கேட்கவில்லை பார்த்திபன். இமயம் அழைத்ததும் உள்ளேன் ஐயா என்று ஓட்டமாக சென்று முதல் வரிசையில் இடம்பிடித்து அமர்ந்து விட்டார். பாரதிராஜா படத்தில் பார்த்திபனுக்கு கதாநாயகன் கொடிவீரன் வேடமா? இல்லை வேறு கேரக்டரில் நடிக்கிறாரா? என்பது விரைவில் வெளிச்சத்துக்கு வந்து விடும்.

No comments: