கொழும்பு : இலங்கையில் புலிகள் இயக்கத்தை முற்றிலுமாக அழித்து விட்ட போதிலும் இலங்கை மீது மீண்டும் போர் தொடுக்க புலிகள் அமைப்பினர் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் இதற்கான விஷேச பயிற்சி அளிக்கும் 3 முகாம்கள் தமிழகத்தில் ரகசியமாக நடத்தப்பட்டு வருவதாகவும் இன்று இலங்கை பார்லி.,யில் பிரதமர் அதிர்ச்சி தரும் திடுக் தகவலை இலங்கை பிரதமர் டி. எம்., ஜெயரத்னே வெளியிட்டார். இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இன்று அவசர கால சட்ட நீட்டிப்பு தொடர்பான மசோதாவை தாக்கல் செய்து அவர் பேசுகையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக பார்லி.,யில் அவர் பேசுகையில் கூறியதாவது: இலங்கøயில் அவசர கால சட்டம் நீட்டிப்பு செய்ய பல்வேறு காரணங்கள் உள்ளன. இதில் முக்கியமாக இலங்கை மீது மீண்டும் ஒரு தாக்குதலை நடத்த புலிகள் அமைப்பினர் திட்டம் தீட்டி வருகின்றனர். இதற்கென தமிழ்நாட்டில் 3 ரகசிய பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. பொட்டு அம்மானுக்கு நெருக்கமான புகழேந்திரன் மாஸ்டர் என்பவர் கண்காணிப்பில் இந்த பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.
இந்திய தலைவர்களையும் குறி வைத்து கொல்ல திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதனையொட்டி இலங்கை முழு விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. இதனால் இந்த அவசரகால சட்டம் நீட்டிப்பு அவசியமாகிறது. இவ்வாறு பிரதமர் ஜெயரத்னே பேசினார். ஒரு மாத காலத்திற்கான இந்த அவசர கால சட்ட நீட்டிப்பிற்கு ஆதரவாக 90 ஓட்டுக்களும், எதிராக 15 ஓட்டுக்களும் கிடைத்தன.
No comments:
Post a Comment