Thursday, March 17, 2011

வைகோ, விஜயகாந்த் இணைந்து 3-வது அணியை உருவாக்க வேண்டும்: நடிகர் கார்த்திக் பேட்டி

கூட்டணி கட்சிகளை ஜெயலலிதா அவமரியாதை செய்துள்ளார். வைகோ, விஜயகாந்த் உள்ளிட்டோருக்கு தொகுதிகள் ஒதுக்கும் முன்பே வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அவரின் அகம்பாவத்தை காட்டுகிறது. வைகோ, மூத்த அரசியல்வாதி. நான் மதிக்கக்கூடிய தலைவர்களில் ஒருவர். அவர் பேச்சை ரசித்து இருக்கிறேன். அ.தி.மு.க.வுக்கு பக்க பலமாக நீண்ட காலம் இருந்துள்ளார். அதுவே தூக்கி எறிந்தது என்னை மட்டுமின்றி, தமிழக மக்களையே அதிர்ச்சிக் குள்ளாக்கியது.

விஜயகாந்த்தும் நல்ல பலத்தோடு இருக்கிறார். அவர் கட்சிக்கும் கேட்ட தொகுதிகளை ஒதுக்க வில்லை. இந்த நேரத்தில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை அள்ளிக்கொடுத்த கருணாநிதியின் தாராள மனப்பான்மை நினைவுக்கு வருகிறது. கூட்டணி தலைவர்களை இப்போதே இந்த பாடு படுத்துகிறவர் நாளை ஆட்சிக்கு வந்தால் என்ன வெல்லாம் செய்வார். கூட்டணி தலைவர்களை கேட்டில்தான் நிறுத்துவார். இவர்களுக்கே இப்படி என்றால் ஓட்டு போட்ட மக்கள் எவ்வளவு தூரத்தில் இருப்பார்கள் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

நாடாளும் மக்கள் கட்சிக்கு தொகுதிகள் எதிர்பார்த்து 20 நாட்கள் காத்து இருந்தோம். எங்களை காயப்படுத்தினார்கள். என்னையோ, எங்கள் கட்சியையோ, மக்களையோ மதிக்காவிட்டாலும் பரவாயில்லை. பசும்பொன்தேவர் உருவம் பொறித்த எங்கள் கொடிக்கு மரியாதை கொடுங்கள் என்றோம். முகத்தை திருப்பிக் கொண்டார்கள். தன்னம்பிக்கை இருக்கலாம். ஆணவம் இருக்க கூடாது. எல்லோரையும் மதிக்கும் பண்பு இல்லாமல் தலைவராக எப்படி இருக்க முடியும்.

கூட்டணி கட்சிகள் தயவு இல்லாமல் அ.தி.மு.க.வால் ஆட்சியை பிடிக்க முடியாது. தமிழக மக்கள் இன்னொரு அணியை எதிர் பார்க்கிறார்கள். வைகோவும், விஜயகாந்தும் இணைந்து 3-வது அணியை உருவாக்க வேண்டும். அந்த அணியில் இணைய எங்கள் கட்சி தயாராக உள்ளது.

இவ்வாறு கார்த்திக் கூறினார்.

1 comment:

Multtipack said...

Sir, your blog is really interesting and have many informations about mukkulathor community.Thanks for your bloging articles ever.Also Follow my blog http://dineshskd.blogspot.com/