சென்னை, மார்ச். 15-
தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 13-ந்தேதி தேர்தல் நடை பெற உள்ளது. தேர்தலில் தி.மு.க., அ.தி. மு.க. தலைமையிலான அணிகளுக்கிடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. தி.மு.க. தலைமையிலான அணியில் தி.மு.க.-121, காங்கிரஸ்-63, பா.ம.க.-30, விடுதலைச் சிறுத்தைகள்-10, கொங்கு நாடு முன்னேற்றக் கழகம்-7, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-2, பெருந்தலைவர் மக்கள் கட்சி-1, மூவேந்தர் முன்னேற்றக் கழகம்-1 என்று தொகுதி பங்கீடு செய்யப் பட்டுள்ளது.
ஒவ்வொரு கட்சிகளும் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்று கடந்த சில தினங்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இன்று (செவ்வாய்) காலை இதில் இறுதி உடன் பாடு ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 63 தொகுதிகள் எவை என்பது பற்றிய ஒப்பந்தத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் தங்கபாலு இருவரும் கையெழுத்திட்டனர்.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகள் பட்டியல் உடனடியாக வெளியிடப் பட்டது. காங்கிரஸ் பெற்றுள்ள 63 தொகுதிகளில் 12 தொகுதிகள் தனிப்பிரிவினருக்கான தொகுதிகளாகும்.
சென்னை மாவட்டத்தில் திரு.வி.க.நகர், ராயபுரம், அண்ணாநகர், தி.நகர், மயிலாப்பூர் ஆகிய 5 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னை புறநகரில் உள்ள தொகுதிகளில் பூந்த மல்லி, ஆவடி, ஆலந்தூர் ஆகிய தொகுதிகளும் காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 63 தொகுதிகள் விபரம் வருமாறு:-
1. திருத்தணி 2. பூந்தமல்லி (தனி) 3. ஆவடி 4. திரு.வி.க.நகர் (தனி) 5. ராயபுரம் 6. அண்ணாநகர் 7. தி.நகர் 8. மயிலாப்பூர் 9. ஆலந்தூர் 10. ஸ்ரீபெரும்புதூர் (தனி) 11. மதுராந்தகம் (தனி) 12. சோளிங்கர் 13. வேலூர் 14. ஆம்பூர் 15. கிருஷ்ணகிரி 16. ஓசூர் 17. செங்கம் (தனி) 18. கலசப்பாக்கம் 19. செய்யாறு 20. ரிஷிவந்தியம்
21. ஆத்தூர் (தனி) 22. சேலம் வடக்கு 23. திருச்செங்கோடு 24. ஈரோடு மேற்கு 25. மொடக்குறிச்சி 26. காங்கேயம் 27. ஊட்டி 28. அவினாசி (தனி) 29. திருப்பூர் தெற்கு 30. தொண்டாமுத்தூர் 31. வேடசந்தூர் 32. சிங்காநல்லூர் 33. வால்பாறை (தனி) 34. நிலக்கோட்டை(தனி) 35. கரூர் 36. மணப்பாறை 37. முசிறி 38. அரியலூர் 39. விருத்தாசலம் 40. மயிலாடுதுறை
41. திருத்துறைபூண்டி (தனி) 42. பாபநாசம் 43. பட்டுக்கோட்டை 44. பேராவூரணி 45. திருமயம் 46. அறங்தாங்கி 47. காரைக்குடி 48. சிவகங்கை 49. மதுரை வடக்கு 50. மதுரை தெற்கு 51. திருப்பரங்குன்றம் 52. விருதுநகர் 53. பரமக்குடி (தனி) 54. ராமநாதபுரம் 55. விளாத்திக்குளம் 56. ஸ்ரீவைகுண்டம் 57. வாசுதேவநல்லூர் (தனி) 58. கடையநல்லூர் 59. நாங்குநேரி 60. ராதாபுரம் 61. குளச்சல் 62. விளவங்கோடு 63. கிள்ளியூர்.
தி.மு.க. போட்டியிடும் தொகுதிகளுக்கான பட்டியல் இன்று இரவு அல்லது நாளை வெளியாகும் என்று தெரிகிறது.
No comments:
Post a Comment