கிடப்பதெலாம் கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மனையில் வை என்பது (ரொம்பவே பழைய) பழமொழி . அதே, கிழவிக்கு பதில் விஜய் எனறால் கசக்குமா என்ன?
அதிமுக கூட்டணியில் மதிமுக மற்றும் கம்யூனிஸ்டுகளுக்கு ஜெயலிலதா தொகுதிகளோ ஏன் தேதியோ கூட ஒதுக்கவில்லை . 'அதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் . முதலில் விஜய்யை உள்ளே உள்ளே இழுத்துப் போட்டு விடுவோம்' என்ற முடிவுக்கு வந்துள்ளாராம் ஜெயலலிதா .
விஜயகாந்த் , கார்த்திக் , ராமராஜன் இவர்களோடு விஜய்யும் அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்தால் அது நட்சத்திரக் கூட்டணியாகிவிடும் என்பது அவரின் எண்ணம் .
விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திர சேகர் ஜெயலிதாவை சந்தித்துப் பேசியபோது எந்நேரமும் விஜய்யை சந்திக்க அழைப்பார் என்று தெரிந்து கொண்டாராம் .
விஜய்க்கு தகவல் தெரிவிக்கப் பட அவரும் படப்பிடிப்பி இருந்து வந்து ஜெயலலிதாவின் அழைப்புக்கு காத்திருக்கிறாராம் ,
இன்று அல்லது நாளை சந்திப்பும் தொகுதிகளும் முடிவாகும் என்கிறார்கள் .
No comments:
Post a Comment