சென்னை: காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க கால அவகாசம் மற்றும் தொகுதிகளின் எண்ணிக்கை இடம் தரவில்லை என்று அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
தி.மு.க.-காங்கிரஸ் உறவு முறிந்து விட்டதால் அ.தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி சேரலாம் என்று பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால் இதற்கான வாய்ப்பு இல்லை என்று அ.தி.மு.க. தரப்பில் கூறப்படுகிறது.
அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 41 இடங்களும் மனிதநேய கட்சிக்கு 3 இடங்களும், புதிய தமிழகம் கட்சிக்கு 2 இடங்களும், பார்வர்டு பிளாக், குடியரசு கட்சிகளுக்கு மூவேந்தர் முன்னணி கழகத்துக்கு தலா ஒரு இடமும் (மொத்தம் 49 தொகுதி) ஒதுக்கப்பட்டு உள்ளது.
ம.தி.மு.க. மற்றும் இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு இன்னும் இடம் ஒதுக்கப்படவில்லை. ம.தி.மு.க.வுக்கு 18 தொகுதிகளும், மார்க்சிஸ்டு கட்சிக்கு 13 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 10 இடங்களும் ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது.
இதனால் அ.தி.மு.க.விடம் 133 தொகுதிகள் மட்டுமே இருக்கும். மெஜாரிட்டிக்கு 118 இடங்கள் தேவைப்படுவதால் அ.தி.மு.க. 130 தொகுதிக்கு குறையாமல் போட்டியிடும்.
ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க அ.தி.மு.க.வில் போதுமான தொகுதிகள் இல்லை. ஏற்கனவே உள்ள கூட்டணி கட்சிகளை கழற்றி விட அ.தி.மு.க. விரும்பவில்லை என்றும் காங்கிரசுடன் சேரவாய்ப்பு இல்லை என்றும் அ.தி.மு.க. தரப்பில் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment