நமது வீட்டு சூழல் ஒரு சிறிய குளம் போல் நமக்கு அந்த குளத்தில் தாயினுடைய அன்பு கிடைக்கும், பெற்றோரின் மூலமாக உலகை பார்க்கலாம், சகோதர சகோதரிகளின் மூலம் பாசத்தை பகிர்ந்து கொள்ளலாம் ஆனால் எல்லாம் ஒரு எல்லைகைக்கு உட்பட்டுத்தான். இந்த குளத்திலேயே இறுதிவரை இருந்தால் உலகம் என்ன என்று புரியாமல் போய் விட வாய்ப்புண்டு.
ஒரு புதிய மாற்றம் புதிய பரிமாணம், தேவை என்றால் அந்த குளத்தைவிட்டு வெளியே வரவேண்டும், நட்பு என்னும் புதிய நீரோடையில் கலக்கவேண்டும், அப்போது தான் உலகம் என்ன என்று நமக்கு புரியவரும், இந்த உலகை நாம் எந்த கண்ணோட்டத்தில் காண்கிறோம் என்பது முக்கியமல்ல நாம் காணும் கண்ணோட்டம் எதை பொருத்தது என்பது தான் முக்கியம், நட்பு என்னும் நீரோடையில் தங்க மீன்களும் நமக்கு துணையாக கிடைக்கும், தவளைகளும் கிடைக்கும், அங்கே நாரைகளும் நிற்கும், சுறாமீன்களும் அங்கு இருக்கும், அவற்றை கண்டுணர்ந்து எது தேவை எது தேவை இல்லை என்று பார்த்து உணர்ந்து நட்பு கொள்வது அவசியம், முக்கியமாக தற்போதைய கலாச்சாரத்தில் நட்பு என்றால் தேவையானவற்றை பகிர்ந்து கொள்ளுதல் தான் நட்பு என்று நினைக்கிறார்கள்.
நாம் எதை பகிர்ந்து கொள்கிறோம் என்பது இங்கு முக்கியம் நாம் தேவையை எதிர்பார்த்து நட்புடன் பழகினால் அந்த தேவை கிடைக்காது என்று தெரிந்த போது நமது நட்பு கசந்து விடும், அதே நேரத்தில் நன்பர்களின் தேவைகளை கவணத்தில் கொண்டு கொடுக்க முடியாவிட்டாலும் ஆறுதல் அல்லது நன்பரின் சிக்கலுக்கான தீர்வை சொல்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
நன்பர்களின் பல விதம் உண்டு,
தனது நன்மைக்காக பழகுபவர்கள்,
இவர்கள் தங்களின் தேவைகள் கிடைக்கும் வரை நட்பில் வழிவார்கள், தனது தேவைகள் இனி மேல் இவரிடம் இருந்து கிடைக்காது என்று தெரிந்த உடன் கழட்டி விடுவார்கள். இந்த ரக நட்புகளை ஆரம்பத்திலேயே புரிந்து கொள்வது ரொம்ப கடினம், ஆனால் முதல் அனுபவத்திலேயே இவர்களை கழட்டி விடுவது அவசியம்,
பொழுது போக்கிற்காக பழகுகிறவர்கள்,
இந்த ரக நன்பர்களை அனுபவமுள்ளவர்கள் ஆரம்பத்திலேயே புரிந்து கொள்வார்கள், இவர்களுக்கு தேவைப்படும் போது பேச்சுத்துணைக்கு நன்பர்களை தேடுவார்கள், பொழுது போகவேண்டுமே என்று இவர்களின் பேச்சுக்கள் தான் இருவரின் உரையாடலில் முதல்மையாக இருக்கும் நன்பரின் பேச்சை இவர் ஏதே காற்றினிலே வரும் கீதம் போல் ஓடவிட்டுக்கொண்டு இருப்பார், ஆனால் அவரது புலம்பல்களை நாம் கவணமுடன் கேட்ட வேண்டும். இந்த ரகங்கள் நமக்கு தேவையில்லாதாது சிலர் தாங்களும் நேரப்போக்கிற்காக இந்த ரகங்களுடன் ஒட்டு சேர்வார்கள்,
வெண்டா வெறுப்பு நட்பு,
ஏதோ ஒரு காரணத்தினால் பழக நேர்ந்து விட்டது, ஆனால் ஒட்டுன்னி போல் நமக்கு அடிக்கடி தொல்லை கொடுத்து கொண்டு இருக்கும் வகை நட்பு தான் வேண்டா வெறுப்பு நட்பு, இந்த ரக நட்பு நமக்கு நன்மையை விட நமது பொண்ணான நேரத்தை சாப்பிடும் தீமைதான் அதிகம் இருக்கும், இந்த வகை நட்புகள் நம்மிடம் இருந்து எதிர்பார்க்கும் ரகங்கள், நாம் ஒன்றை இவர்களிடம் கேட்டுவிட்டால் இந்த நட்பு அன்றோடு டிஸ்மிஸ் அதனால் இது போன்ற நட்பை கட் செய்ய எளிய வழி ஏதாவது ஒன்றை கேட்டு விட வேண்டியது தான், அவ்வளவு தான் பிறகு வருடக்கணக்கில் நாம் நிம்மதியாக இருக்கலாம்,
------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- -------
கீழ்வரும் நட்பிற்கு உதாரனங்கள் சொல்ல முடியாது சொன்னால் அந்த நட்பிற்கு களங்கம் ஏற்படும்
இருப்பினும் அந்த நட்பை அடையாளம் காட்டுவதற்கு
உண்மையான நட்பு,
தனது மனதில் தன்னால் ஒரு
மனிதனுக்கு என்ன செய்ய முடியும் அந்த நன்பரின் வாழ்க்கையில் அந்த சமூதாயத்தில் நல்ல மாற்றம் கொண்டு வர முடியுமா என்று நினைத்து பழகுவது ஒரு அற்புதமான நட்பு இந்த நட்பிற்கு பெரிய உதாரணம் வள்ளியம்மை-காந்திஜி-வினோபா-சரோஜினி நாயுடு போன்ற நட்பு சங்கிலியை சொல்லாம்.
அன்பை மட்டும் எதிர் நோக்கும் நட்பு
சில தவிர்க்கமுடியாத காரனங்களால் தாங்களில் உடன் பிறந்தோர் பெற்றோரிடம் இருந்து தான் எதிர்பார்த்த அன்பு கிடைக்காத போது வெளியுலகில் பறந்து சென்று அற்புதமான நட்பை தேடும் இதயம் ஒருவகை ஆனால் இந்த உலகம் எல்லமுமே புத்தர் மயம் இல்லை, இங்கே மனித உருவில் பல விலங்கு குணங்கள் உண்டு, இந்த விலங்குகளுக்கு இவர்கள் எளிதில் பலியாகிவிடுவார்கள். இது போன்ற நட்பை தேடி பல வேடர்கள் வலை விரித்து காத்து இருக்கின்றனர். இந்த வலைகளை இவர்கள் எளிதில் சிக்கிவிடுவதும் பரிதாபத்திற்கு உரியது.
தவறாக எடுத்து கொள்ளும் நட்பு :-
இந்த நட்பிற்கும் மேலே சொன்ன நட்பிற்கு தொடர்பு உண்டு, ஆம் இந்த நட்பில் அதிக நம்பிக்கை வைத்து பழகி விடுவார்கள், மேலே சொன்னவர்கள் தங்களின் ஆறுதலுக்காக தேடும் நட்பினை இந்த வகையை சேர்ந்தவர்கள் கொஞ்சம் அதிகமாக உரிமை எடுத்து கொள்வதால் இருவருக்கும் மனவேதனைகள் ஏற்படும், மெலே சொன்ன இரண்டு நட்புகளும் சரியாக புரிந்து கொண்டால், அந்த நட்பு புதிய பரிமானத்தை இருவருக்கு ஏற்படுத்தி கொடுக்கும்,
இன்னும் எவ்வளவோ சொல்லிகொண்டு போகலாம், நட்பு என்பது புனிதமானது, காதலை விட நட்பு உயர்ந்தது ஏன் என்றால் காதலுக்கு ஒரு எல்லை உண்டு, அது வரைமுறைக்கு உட்பட்டது, ஆனால் நட்பு வரைமுறைக்கு அப்பாற்பட்டது, உலகில் மனிதராக பிறந்த அனைவருக்கு இந்த நட்பு தேவை அது சாதி, இனம், மொழி, நாடு என வித்தியாசம் இல்லாமல் தென்றல் காற்றாக இந்த பூமியை வலம் வரும் நட்பு,
நான் உன்மையில் கொடுத்து வைத்தவன் எனது நட்பு வட்டம் அற்புதமானது, ஏனேன்றால் எனக்கு கிடைத்த முதல் நட்பு அப்படிபட்டது, இன்றுவரை எனது நட்பு வாழ்க்கையில் சறுக்கல் இல்லை, இனியும் வராது?
"இருவருக்குள் ஏற்பட்டிருக்கும் நட்பை உடைக்க சிலர் முயற்சிக்கலாம் நாம் அதற்கு ஆட்பட்டு விடக்கூடாது. சில சமயங்களில் நன்பர்களுக்கு ஒரு சில தவறுகள் நடந்து இருக்கலாம் அவற்றை பெரிது படுத்தாமல் அவற்றை அடிக்கடி சுட்டி காட்டாமல் இருந்து விட்டால், அந்த நட்பு இறுதிவரை நிலைத்து இருக்கும்
நட்பு என்பது ஒருவரின் முகம் பார்த்து தான் வரவேண்டும் என்பதில்லை, இனிய இதயம் இருந்தால் போதும்"
நான் பிறந்த போது என்னை என் அன்னை அன்புடன் பார்த்தார் நான் அந்த பகிர்ந்து கொண்டு இன்று வரை அனைவரையும் பார்க்கிறேன்
No comments:
Post a Comment