Monday, November 26, 2018

மலேசியாவில் இஸ்லாம் சமூகத்தினர் ஆலயத்தை உடைக்கிறார்கள்


#மலேசியாவில் இஸ்லாம் சமூகத்தினர் ஆலயத்தை உடைக்கிறார்கள் அரசாங்கத்தின் ஆதரவோடு. கேட்க வந்த இந்து மக்களையும் அடித்து துன்புறுத்துகிறார்கள் இதைக் கேட்க ஒரு நாதி இல்லை!!!
காவல்துறையினர் கைகட்டி வாய் பொத்தி நிற்கும் அவலம் #இஸ்லாமியநாட்டில் நம் தெய்வத்தை வணங்குவதற்கு எத்தனை பாடுபட வேண்டியிருக்கிறது
காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு. அதேபோல் தன் இனம் தான் தனக்கு பெரிது என்று வாழும் அரசியல்வாதிகள்..!!!
இந்த காணொளியில் மக்களின் குமுறலை பாருங்கள்

https://www.facebook.com/100025688072073/videos/268302867369314/


மலேசியாவில் சிக்கி தவித்த 49 தமிழர்களை மீட்டெடுத்த கருணாஸ் எம்.எல்.ஏ

திருநெல்வேலி மாவட்டம் தலைவன் கோட்டை, மளடிக்குறிச்சி, அரியூர்,பாரப்பட்டி,சங்கரன் கோவில் மற்றும் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஆகிய ஊர்களில் இருந்து சுமார் 49 க்கும் மேற்ப்பட்டவர்கள் (பெரும்பாலானோர் முக்குலத்தோர்) மலேசியாவில் உள்ள தனியார் டவர் நிறுவனத்திற்கு பணிக்கு சென்றனர்.
அங்கு நிர்வாகத்திற்கும் பணியாற்றும் தமிழர்களுக்கும் இடையே ஏற்ப்பட்ட பிரச்சனையின் காரணமாக இவர்களுக்கு சம்பளம் மற்றும் அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டது. சம்பள நிலுவையின் காரணமாக தகராறு ஏற்பட இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இதனால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அங்கு அருகில் உள்ள காட்டு பகுதியில் தலைமறைவானார்கள். கிட்டதட்ட பலநாட்கள் உண்ண உணவும் உறைவிடமும் இல்லாமல் காட்டிலேயே தங்கினர். இந்த தகவல் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர் சேது.கருணாஸ்தேவருக்கு தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து கருணாஸ் எம்எல்.ஏ,
அதிகாரிகளை தொடர்பு கொண்டு மலேசியாவில் உள்ள பாத்தி கேம்ப் முருகன் கோவிலுக்கு பாதிக்க பட்டவர்களை அழைத்து வந்து அதிகாரிகள் மூலமாக பேச்சு வார்த்தை நடத்தினார். சட்டமன்ற உறுப்பினர்களையும் நேரில் சந்த்தித்து முறையிட்டார்.
கருணாஸ் அவர்களின் முயற்ச்சியால், 49 தமிழர்களுக்கும் திரும்பவும் பணியாற்றும் வாய்ப்பையும் தங்குவதற்கு ஒரு கேப்ம் யை ஏற்படுத்தி கொடுத்தார்.
கருணாஸ் எம்.எல்.ஏ வின் முயற்சிக்கு பலதரப்பினரும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

Saturday, November 24, 2018

பெரியவருக்கு வீர வணக்கம்

தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் பார்வர்ட் பிளாக் கட்சியின் முன்னாள் தலைவருமான எல்.சந்தானம் அவர்கள் இன்று மறைந்திருக்கிறார். 2005ம் ஆண்டு மார்ச் மாத தேவர் மலர் இதழுக்காக சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் அவரை சந்தித்தோம். மதுரை திருநகரில் தேவர் திருமகனார் வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக்க வேண்டும் என்று இவர் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அன்றைய முதல்வர் ஜெ,ஜெயலலிதா அவர்கள் திருநகர் இல்லத்தை நினைவிடமாக்க ஆணை பிறப்பித்தார். அதற்கு நன்றி சொல்லும் விதத்தில் அவரது பேட்டி தேவர் மலரில் வெளியானது. அதன் பின்பு பலமுறை அவரை பேட்டி கண்டிருக்கிறேன். இருப்பினும் முதல் முறை அவரைச் சந்தித்த போது எனக்கு சிறிய வயது 25, இந்த வயதில் பத்திரிகை நடத்துவது என்பது மிகவும் சிரமமான காரியம். உங்களுக்கு தேவர் துணை இருப்பார் என்று வாழ்த்தினார். இன்று வரை தேவர் மலர் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. அவர் மறைந்திருக்கும் இன்றைக்கு அவர் அன்றைக்கு கூறிய ஆசீர்வாத வார்த்தைள் எனது மனதில் பதிந்திருக்கிறது. பெரியவர் என்று அழைக்கப்படும் ஐயா எல்.சந்தானம் அவர்களுக்கு தேவர் மலர் சார்பில் வீர வணக்கம். அவரது ஆன்மா சாந்தியடைய தேவர் திருமகனாரை வணங்குகிறேன். ஜெய்ஹிந்த்!
Image may contain: 4 people, people smilingImage may contain: 4 people, textImage may contain: 3 people

Thevar Malar

Tuesday, November 20, 2018

நடிகர் விஜய்சேதுபதி வழங்கும் 25 லட்சம்

நடிகர் விஜய்சேதுபதி வழங்கும் 25 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் பகுதிவாரியாக பிரித்துக்கொடுக்க தன்னார்வலர்கள் (இளைஞர்கள்) தேவை... உங்கள் பகுதிக்கு என்ன பொருட்கள் தேவை எத்தனை நபர்களுக்கு தேவை என்பதை எங்களிடம் தொடர்பு கொண்டு தெரிவிக்கவும்... #கலைடிவி அலுவலகத்தை நேரடியாக அணுகலாம்... வேதாரண்யம் தாலுக்கா முழுவதும் வழங்கபடும்...
தொடர்புக்கு : 8489271000, 8015921556, +916383198795, +916379958309,

Friday, November 16, 2018

'கவியரசு' கண்ணதாசன் பார்வையில் கள்ளர்கள்

வேலும் வாழும் தங்கிய மறவர் வீழ்ந்ததும் கிடையாது!
எக்குலத் தோரும் ஏற்றிப்புகழ்வது எங்கள் பெருமையடா!
எம் முக்குலத்தோர்க்கே உலகில் உவமை காண்பது அருமையடா! "
- என்று மண்ணின் மைந்தன் கவியரசு கண்ணதாசன் ‘சிவகங்கை சீமை’ திரைப்படத்தில் எழுதிய பாடல் வரிகள் இவை.
இதைப்பற்றி ஒருவர் அவரிடம் முக்குலம் என்பது சாதியை குறிப்பதல்லவா? என்று கேட்டதற்கு கவியரசு கண்ணதாசன் அவர்களின் பதில்.
முக்குலம் என்பது சாதியல்ல. கள்ளப்படை, மறப்படை, அகப்படை ஆகிய மூன்று படைகளை குறிக்கும். பகைவரின் பாசறைக்குள் ஊடுருவி உளவறிந்து வருவது கள்ளப்படை, நேர் சென்று போர் புரிவது மறப்படை. கோட்டையை காப்பது அகப்படை. இம்முப்படைகளே கள்ளர் - மறவர் - அகம்படியர் என்ற முக்குலமாக மாறின. தலைமறைந்து செல்வதை கள்ளத்தனம் என்றும், துணிந்து நிற்பதை மறத்தனம் என்று அழைப்பதை அறிவீர்கள். இவை, பின்னால் வந்த வழக்குகள். உளவறியும் கடினமான வேலையை செய்ததால்தான், கள்ளப்படைக் குலத்தினரை "அம்பலக்காரர்கள்" என்று மரியாதையோடு அழைக்கிறது மறவர் நாடு.

Sunday, November 11, 2018

மறக்குடியே பாண்டியர் குடி :13

புதுக்கோட்டை மறவர்கள் பெயரில், கரைகளில் கூட்டங்களில் , குலதெய்வ வழிகளில் பாண்டியர் வம்சத்தை, அதன் தொடர்புகளை, இப்போது காண்போம்.
இயற்பெயரில். ..
°°°°°°°°°°°°°°°°°°°°°
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் பற்றிய செய்திகளை சங்ககால இலக்கியங்களில் காணலாம். அந்த ஒல்லையூர் புதுக்கோட்டை வட்டாரமாகும். ஒல்லையூர் மறவருக்கு "மதுரை மறவர்" என்பது இயற்பெயராகும். ஒல்லையூர் அருகிலும் "மறவ மதுரை" என்றொரு ஊர் உள்ளது . பனையூர் மறவரின் இயற்பெயர் "சுந்தரபாண்டியன் " என்பதாகும். "ஒல்லையூர் மங்கலத்து ஊராயிசைந்த ஊரவராக மதுரை மறவரோம்" என மாறவர்மன் சுந்தரபாண்டிய தேவன் இடையாத்தூர் கல்வெட்டில்(க.எண்309) மறவர்குழுக்களின் பேரரையராக ஆறுபேரும், நாடாள்வாராக,(மறவர்) இருவரும் இடம் பெற்றுள்ளனர்.இங்கு சுட்டப்படும் அரையர்களும் நாடாள்வாரும் மறவர்களே. ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் வழியினராக இந்த மறவர்களையே கருத இடமுண்டு.
கரைகளில். ...
°°°°°°°°°°°°°°°°°°
மறவர்கள் என்றாலே அவர்களின் உட்பிரிவுகள் கிளைவடிவம் கொண்டு விளங்குபவை, என எண்ணுவதே இங்கு பலரின் புரிதலாகும். ஆனால் மறவர்கள் கிளைப்பிரிவினராக மட்டுமல்ல கரை-கூட்டம் -பட்டம் -கோத்திரம் என பலவழிகளில் பிரிந்து கிடக்கின்றதை அவர்கள் அறிவதில்லை! தென்பாண்டிய நாட்டில் பிரிவாகவும், கிளையாகவும் பிரித்தறியப்படும் இந்த ஜாதியினர், புதுக்கோட்டை வட்டாரங்களில் கரைகள்- கூட்டங்கள்- பட்டங்களாக வகுத்தறியப்படுகின்றனர். அதில் பிரதானமாக கரைப்பிரிவினர் உள்ளனர். கரைக்குள் கூட்டம்,புறம், வகை என இவர்கள் பல பரிணாமங்களைப் பெற்றவர்களாவார்கள். இதில் பாண்டிய வழியோடு தொடர்புடையதாக...
பாண்டியர் கூட்டம்
° ° ° ° ° ° ° ° ° ° ° ° ° °
பனையூர் தெற்குத்தெரு வாழும் ஐந்தாவது கரைப்பிரிவினர் "பாண்டியா கூட்டம்" என்ற பெயரில் உள்ளனர். இவர்களின் குலதெய்வமாக,வெள்ளையாலடி கருப்பரும் -நல்லம்மாள் அம்மனுமாக, ஆண்-பெண் தெய்வங்களை ஒன்றுபட்டு வணங்கி வருகிறார்கள்.
செண்டுப்புலி. ..
°°°°°°°°°°°°°°°°°°°°
பாண்டிய அடையாளமாகிய இரட்டை மீன்களுக்கு நடுவில் காணப்படும் கோல் -சாட்டை போன்ற வடிவமானது ஆய்வாளர்களால், "செண்டு" என்று தீர்மானிக்கப்படுகிறது, செண்டானது ஓர் ஆயுதம். இது ஐயனார் எனும் சாஸ்தா கரத்தையும் அலங்கரிக்கிறது. இச் செண்டு பெயரில் "செண்டுப்புலி" என வழங்கப்பெறும் வகையறாக்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில், செவலூர் ஊரில், வலங்கித்தெருவில் வாழ்ந்து வருகிறார்கள். வலங்கித்தெரு என்பது "வலங்கைப் படையினர்" வசித்த பகுதியாக இருந்திருக்கலாம். வலங்கைத்தெரு என்பதுதான் வலங்கித்தெரு என்றாயிருக்கவேண்டும். மேலும் இதே தெருவில், "கெண்டையன் தீத்தாரி" எனும் வகையறாக்களும் உள்ளனர். கெண்டையன் எனும் பெயர் கெண்டையாகிய கயல் மீனைக் குறிக்கிறது. தீர்த்தம் என்பது புனித நீரைக் குறிக்கிறது. தீர்த்தவாரி என்பது புனித நீராடலைக் குறித்த வாக்கியமாகும். இதில் புனித நீராடலைச் செய்துகொண்டிருக்கும் கெண்டையன் எனும் பொருளில் விளங்கப்பெறும் இந்த பெயர், பாண்டியனைக் குறிப்பிடுவதாக உணரமுடிகிறது. இவர்கள் பன்னிவீரனை குலதெய்வமாக வணங்கி வருகிறார்கள். புதுகையானது முன்னாள் "பன்றிநாடு" என அழைக்கப்பட்டது. பன்றி வீரன் என்பது பன்றிநாட்டு வீரனையே குறிப்பதாகும். பன்றி மருவி பன்னி யாகி விட்டது . இந்த தெருவில்தான் அழகியபாண்டியனின் திரிபுச் சொல்லாக விளங்கும் "அழகாண்டான்" கரை மறவர்களும் வாழ்கின்றனர். இவர்கள் குலதெய்வம் "ராஜாக்கள்- மூதாக்கள்" சுவாமி ஆகும்.
கெண்டையன்
°°°°°°°°°°°°°°°°°°
செவலூர் வலங்கித்தெருவில் வாழும் கெண்டையன் தீத்தாரி என்போரைத் தவிர, மலையடிப்பட்டி ஊரில், "கெண்டையன் கரை" என தனியாக கரைப்பிரிவினர் உள்ளனர். இவர்களுக்கு செவலூர் மூதாக்கள் சுவாமியே குலதெய்வமாக உள்ளது. கெண்டை என்பது கயல் என்று முன்னர் விளக்கப்பட்டுள்ளது. மேலுள்ள கெண்டையன் தீத்தாரி மற்றும் கெண்டையன் ஆகியோர் ஒரே மூலத்தை உடையவர்களாக இருக்கவேண்டும் என்பது இருவருக்கும் ராஜாக்கள் மூதாக்கள் என வரும் ஒரே குலதெய்வ வணக்கத்திலிருந்து அறியமுடிகிறது.
பாண்டியா அம்பலம் வகை
° ° ° ° ° ° ° ° ° ° ° ° ° ° ° ° ° ° ° ° °
விரையாச்சிலை ஊரில் பாண்டியா அம்பலம் வகையினர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் குறித்து ஆராயந்திட இயலவில்லை.
பொதியன் வீடு
° ° ° ° ° ° ° ° ° ° ° °
விரையாச்சிலை ஊரில் உள்ள "பொதியன் வீடு" வகையறாக்கள் தன் பெயரிலேயே பாண்டியனின் மற்றொரு பெயராக விளங்கும் பொதிகையன் எனும் பெயரில் விளங்குவது ஆச்சர்யம் அளிக்கும் வகையில் உள்ளது. பொதிய மலைக் குரியவன்--பாண்டியன் (கலித். 36.) பொதியன் எனும் பெயர் பாண்டிய குல குருவான அகத்தியரையும் குறிக்கும் என தமிழகராதி சொல்கிறது.
பாண்டியனுக்குரியவையாக முத்துடன் பொதிகைச் சந்தனமும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. விலக்காடிய ஐயனார் இவர்கள் குலதெய்வமாக விளங்குகிறது. இதே ஊரில் ஏழாம் கரையினராக மற்றொரு "பொதியன்" வகையறாக்கள் உள்ளனர். இவர்களின் குலதெய்வமாக "திருமயம் கோட்டை- முனி" இருக்கிறது.
பஞ்சவராயன்
° ° ° ° ° ° ° ° ° ° °
விரையாச்சிலை ஊரில் பஞ்சவராயன் என ஓர் மறவர் குடும்பத்தினர் வாழ்ந்து வாரிசில்லாமல் மறைந்ததை, திரு: ஐயா. மேலப்பனையூர் கரு.ராஜேந்திரன் அவர்கள் தெரிவிக்கிறார்கள். இக்குடும்பத்தவர் பாதிக்காரன் என மற்றொரு பெயரில் வழங்கப்பட்டதையும் அவர் தெரிவிக்கிறார். பஞ்சவராயன் என்பது பஞ்சவராகிய பாண்டியனின் மறுபெயராகும். இப் பஞ்சவராயர்கள் மகுடத்தில் சூடும் அணிகலனாகிய செம்மயிருக்காக மோதிக்கொண்டோருள் ஒருவராக புதுக்கோட்டை கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது.
{I.P.S.21.புதுக்கோட்டை மாவட்டம்}
திருமயம் வட்டம், மேலப்பனையூர் ஞானபுரீஸ்வரர் கோயில் மகாமண்டபத்தில் கீழ்ப் படிக்கட்டில் தெற்கில் உள்ள கல்வெட்டு....
"பனையூர் மறவரில் வளத்து வாழ்வித்தான் ஆன தெள்ளியர் உள்ளிட்டாரும்,நரசிங்கத்தேவர்,"பஞ்சவராயர்",பல்லவராயர் உள்ளிட்டாரும் வத்தாயரானை திருமேனியர் அடைக்கலங்காத்தன் உள்ளிட்டாரும் ஆக இந்நாலுவகை பேரரையரயர் மேற்படியூர் மறவரில் சோழகோன் ஆன கோனாட்டு பேரரையர் உள்ளிடாரும் ஆவுடையான் ஆன வகைப்பேரும் உள்ளிட்டாரு மோம் நம்மில் இசைந்த பிரமானம் பன்னிக் கொண்டபடி செம்மயிர் விரோதம் இரண்டு வகையில் அழிவில்...." - என்று பஞ்சவராயர் எனும் பாண்டியன் பெயருடைய அரையர் ஒருவரைக் குறிப்பிடுகிறது.
பொதியன் - பஞ்சவராயன் ஆகிய இரு வகையறாக்களும் விரையாச்சிலையின் முதலாவது கரை மறவர்கள் ஆவார்கள்.
இவ்வூரில் நான்காம் கரையினராக, "பாண்டியனம்பலக்காரர்" வகையினர் உள்ளனர். இவர்களுக்கு தெற்கு வாசல் கருப்பராகிய "முத்துக்கருப்பர்" குலதெய்வமாக விளங்குகிறது.
அன்பன்: கி.ச.முனிராஜ் வாணாதிராயன்

************கள்ளர் குல மன்னர்************

*****கட்டலூர்,பெரம்பூர் நரசிங்க தேவர்*****
புதுக்கோட்டை மாவட்டத்தின் எல்லைப்பகுதியான விராலிமலையில் உள்ள ஊர்களான கட்டலூர்,பெரம்பூர் ஊரை மையமாக கொண்டு சோழர்,பாண்டியர் காலம் முதல் பிரிட்டீஸ் ஆரம்ப காலம் வரை ஆட்சி புரிந்த கள்ளர் குல சிற்றரசர்களை நாம் இப்போது காணலாம்.
சங்க இலக்கியமான புறநானூறில் குறிப்பிட்ட ஆவூர் கிழார் பாடல்களில் வரும் ஆவூர் இந்த பெரம்பூர்,கட்டலூர் சிற்றரசர்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி தான்.
இந்த கள்ளர் குல சிற்றரசர்களை பற்றி முறையான கல்வெட்டுகள் கிபி1391ஆம் ஆண்டில் கிடைக்கப்பெருகிறது. அந்த கல்வெட்டுகளில் பெரம்பூர் அரசர்கள் என்றே குறிக்கப்பட்டுள்ளது.
முதல் கல்வெட்டில் சிவன்கோவில் தெற்கே பொரித்துள்ள வாசகப்படி பெரம்பூர் அரசு நரசிங்க தேவன் என குறிக்கப்படுகிறது.
இரண்டாவது கல்வெட்டில் குன்னாண்டார் கோவிலில் பொரிக்கப்பட்ட வாசகப்படி சோழவளநாட்டு வடகோனாட்டு பெரம்பூர் அரசு அடைக்கலங்காத்தவனான நரசிங்க தேவன் என குறிக்கப்படுகிறது.
இப்படியாக சோழர் காலம் தொட்டே பெரம்பூர் அரசை அரசாண்ட கள்ளர்குல சிற்றரசர் நரசிங்க தேவன் வழியினர்.
பிற்காலத்தில் திருமலை நாயக்கர் காலத்தில் சோழர்கள்,பாண்டியர்கள் வீழ்ச்சிக்கு பின்பு அரசர் இடத்தில் இருந்து பாளையக்காராக மாற்றப்படுகிறார்.
இந்த கள்ளர்குல நரசிங்க தேவன் வழியினர் கிபி1686ஆம் ஆண்டு மத நல்லிணக்கத்திற்காக கிறித்துவர்களுக்கு தேவாலயம் அமைக்க ஆவூர் பகுதியில் அனுமதி கொடுத்துள்ளனர்.
இந்த சம்பவத்தை சமகாலத்தில் வாழ்ந்த ஒரு பாதிரியார் கட்டலூர்,பெரம்பூர் கள்ளர் அரசர் ஆவூரில் தேவாலயம் கட்ட அனுமத்தித்தார் என குறித்துள்ளார்.
மேலும் இச்சம்பவம் புதுக்கோட்டை அரசு ஆவணத்திலும் பதிவாகியுள்ளது.
பிற்காலத்தில் இந்த பகுதி குளத்தூர் தொண்டைமானின் ஆளுகைக்கு உட்படுகிறது.
பின்பு கிபி 1716ல் சொக்க நாத நாயக்கருக்கும்,குளத்தூர் தொண்டைமானுக்கும் ஏற்பட்ட போரில் நாயக்கர் படைகள் ஆவூரில் உள்ள தேவாலயத்தில் பதுங்கிய காரணத்தால் தொண்டைமானாரின் கள்ளர் படைகள் நாயக்கர் படையை விரட்டி,தேவாலயத்தையும் இடித்து தரைமட்டமாக்குகிறார்கள்.
இந்த சம்பவம் மத நல்லிணக்கத்தை விரும்பிய குளத்தூர் தொண்டைமானார் மனவருத்தமுற்று
மீண்டும் தேவாலயம் கட்ட இடமும்,அனுமதியும் அளிக்கிறார்.
இன்று கள்ளர் குல நரசிங்க தேவனின் ஆட்சிப்பகுதிகள் விராலிமலை சட்டமன்ற தொகுதியாக உள்ளது.
இந்த சட்டமன்ற தொகுதியில் கள்ளர் இனத்தை சேர்ந்த அமைச்சர் சி.விஜய பாஸ்கர் மழவராயர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
அன்றும்,இன்றும்,என்றும் இப்பகுதி கள்ளர் தலைவர்களின் ஆளுமைகளுக்கே கட்டுப்பட்ட கள்ளர் நாடாக உள்ளது.
மேலும் இங்கு புகழ்பெற்ற கள்ளர் நாட்டார்களால் நடத்தப்படும் தென்னலூர் ஜல்லிக்கட்டும் இங்குதான் நடைபெருகிறது👍
குறிப்பு: கெளலிகள் கண்களுக்கு இன்னும் இந்த மன்னர் புலப்படவில்லை😂
நன்றி
Saints,Goddess and kings by Dr.Susan Bally
Gazetteer of Tamilnadu Pudukottai
Tamilnadu archaeological department
மற்றும்
திரு.சியாம் சுந்தர் சம்மட்டியார்
திரு.சுதாகர் சம்மட்டியார்
அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு

Image may contain: 1 person
Image may contain: textImage may contain: textImage may contain: textImage may contain: text

Saturday, November 10, 2018

,,,,,,,,,,,,,,,,,,,#கண்ணீர்_அஞ்சலி, ,,,,,,,,,,,,,,,


Image may contain: 3 people, people standing
நான் சிலமுறை ஐயா.பொன்னு அவர்களை பார்த்துள்ளேன். நான் சிறு வயதில் கமுதியில் முடிவென்ற சென்ற போது முதன்முதலாக பார்த்து வியந்து போனேன். அவர் கையில் தேவரின் படத்தை பச்சை குத்தியிருந்தை பார்த்து. எனக்கு முடிவெட்டியவர் அவர் தான்.
அவரது கடையிலும் தேவரின் படத்தை மாட்டியிருப்பார். நான் சமிபத்தில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் இயக்கத்தில் சேர்ந்த பின் சில மாதங்களுக்கு முன் ஐயா.பொன்னு அவர்களை மீண்டும் பார்த்துள்ளேன். அப்போது பசும்பொன் தேவரை பற்றி குறிப்பிடும் போதெல்லாம் தலைவர் என்ற வார்தையை மட்டும் குறிப்பிடுவார். தலைவர்களிலே இவர் ஒரு மகான் என தேவரை புகழ்வார்.
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகா, புதுக்கோட்டை கிராமம் தான் இவரது பூர்வீக கிராமம். ஐயா. பொன்னு அவர்கள் இளம் வயதிலேயே பசும்பொன் தேவரின் மேடை பேச்சுகளால் கவரப்பட்டு பார்வர்ட் பிளாக் இயக்கத்தில் இணைந்தவர். அதன்பின் இன்று தான் மறையும் வரையிலும் தன் வாழ்நாள் முழுவதும் தேவர் திருத்தொண்டராகவே பார்வர்ட் பிளாக்கில் இருந்தவர். இயக்கத்திற்காக பல போராட்டங்களில் கலந்துகொண்டவர். இலங்கை தமிழர்களுக்காக இந்தியாவில் முதன்முதலில் குரல் கொடுத்த இயக்கமான பார்வர்ட் பிளாக் இயக்கத்தின் தீவெட்டி போராட்டத்திலும் ஐயா.பொன்னு அவர்கள் கலந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.ஜி.ஆர். ஒருமுறை பசும்பொன் வந்த போது ஊரில் மின்சாரம் இல்லாததால் , ஐயா.பொன்னுசாமி அவர்கள் ஒரு பனையோலையில் செய்த விசிறியை எடுத்து வந்து எம்.ஜி.ஆருக்கு வீச தொடங்கினார் . அந்த விசிறியை கொடு நீ வீச வேண்டாம் நானே விசிறிக்கொள்கிறேன் என எம்.ஜி.ஆர் அவர்கள் சொல்ல ஏன் ஐயா நான் என் கையால் விசிற வேண்டாம் என்கிறீர்கள் என கேட்க, அதற்கு எம்ஜிஆர் பசும்பொன்னார் மீது மதிப்பு வைத்துள்ள நீங்கள் பசும்பொன்னாரின் திருவுருவ படத்தை கையில் பச்சை குத்தியுள்ளீர்கள், நீங்கள் அந்த கையில் விசிறுவது எனக்கு அந்த பசும்பொன் திருமகனே விசுறுவது போல சங்கடமாக உள்ளது என கூறிய எம்.ஜி.ஆர். பின்பு விசிறியை ஐயா.பொன்னு அவர்களிடம் பெற்று தானே வீசினார் என்பது வரலாற்று நிகழ்வு.
இப்பேர்ப்பட்ட தேவரின் திருத்தொண்டர். இன்று (11-11-2018 )மதுரையில் தனியார் மருத்துவனையில் காலமானர். அவரது உடல் இன்று மாலை கமுதி கோட்டைமேட்டில் உள்ள தேவர் சிலை அருகே உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. தேவர் திருமகனின் திருத்தொண்டருக்கு நாம் அனைவரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்துவோம். நாளை 12-11-2018 ல் அவரது உடல் ஊர்வலமாக சென்று அடக்கம் செய்யபட இருக்கிறது.
வருத்தத்துடன்
அகில இந்திய பார்வர்ட் பிளாக்
இராமநாதபுரம் மாவட்டம்

”தேவர் மகன்” என்று பெயர் வையுங்கள்

கமல்ஹாசனுடைய ஹிட் படங்களில் முக்கியமான ஒரு படமாக இருப்பது தேவர் மகன். கமல்ஹாசன், சிவாஜி, கௌதமி, ரேவதி, நாசர் என எல்லோருக்கும் சிறப்பான பங்களிப்பை கொடுத்த படம். இந்த படத்திற்கு முதலில் வைத்த பெயர் நம்மவர். ஆனால் இசையமைப்பாளர் இளையராஜா, இதற்கு "தேவர் மகன்" என பெயர் வையுங்கள் என கமலிடம் சொல்ல, அதை ஏற்றுக்கொண்டு பெயர்மாற்றம் செய்தார் கமல்ஹாசன்.

Devarattam

Watch Monday morning at 8 am SunTV  VanImage may contain: 1 person
akkamTamizha Director muthaiya is coming for the show

Kallar, Maravar and Agamudayar are the traditional military castes of the Tamil society.

Image may contain: textNo automatic alt text available.No automatic alt text available.

Friday, November 9, 2018

கிருஷ்ணசாமியை எச்சரிக்கும் கருணாஸ் எம்.எல்.ஏ..!

தேவர் மகன் 2 படம் எடுக்க கூடாது என கிருஷ்ணசாமி வெளியிட்ட அறிக்கைக்கு பதில் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார் சேது.கருணாஸ் ..!
அந்த அறிக்கையில் கருணாஸ் தெரிவித்திருப்பது
"புதியதமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி, வெளியிட்ட அறிக்கையில் கமலஹாசன் தேவர் மகன்2 படம் எடுக்கப்போவதாகவும், அப்படி எடுத்தால் அப்படம் முடங்கும் எனவும் தெரிவித்திருந்ததார். தமிழகத்தில் யார் என்ன படம் எடுக்கணும், என்ன பெயர் வைக்கணும் என்பதை கதாநாயகனும், தயாரிப்பாளரும் முடிவு செய்வார்கள் தவிர நீங்கள் இல்லை. தேவர் மகன் படத்தால் தென் தமிழகத்தில் பெரிய கலவரம் ஏற்பட்டதாக கூறியிருந்தீர்களே...ஏதேனும் இரு சமூகத்திடையே கலவரம் வரும் மாதிரி எந்த ஒரு காட்சியாவது அப்படத்தில் இருக்கிறதா? தேவர் மகன் படம் என்பது கிராமத்தில் இரு குடும்பத்தினரிடம் உள்ள பகையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம்.அதில் கூட இறுதி காட்சியில் அனைவரும் பிள்ளைகளை படிக்க வைக்க சொல்லி அறிவுரையே வழங்கியிருப்பார் கமலஹாசன்.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் அளித்த பேட்டியில் கூட தன் சாதியினரை உயர்வாக படம் எடுக்கலாம் தவிர எந்த சாதியையும் குறைத்து படம் எடுக்க கூடாது என கூறியிருந்தார்.அதன்படி பார்த்தால் சமீபகாலமாக சில டைரக்டர்கள் தேவர் சமுதாயத்தை இழிவு படுத்தும் விதமாகவே படம் எடுக்கின்றனர்.அச்சமயம் தங்களை போன்றவர்கள் வாயை பொத்திக்கொண்டு இருப்பது ஏன்?
தேவர் மகன் படத்தின் காரணமாக 25 ஆண்டுகளாக இரு சமூகத்தினரிடையே பகை தீராமல் இருப்பதாக பொய்யான கருத்தை விதைக்கும் நீங்கள் 1957ல் இருந்த காங்கிரஸ் அரசு இரு சமூகத்தினரிடையே தீராத பகையை ஏற்படுத்த காரணமாக இருந்ததை பற்றி பேச திராணி இருக்கிறதா? உங்களுக்கு...
புராணகதைதகளில் உள்ள வீரவாகுத்தேவர், புலித்தேவன், வெள்ளையத்தேவன், ரீபெல்முத்துராமலிங்க சேதுபதி, வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், பசும்பொன் திருமகனார் உட்பட பல வரலாற்று பெருமைகளுக்கு சொந்தக்காரர்களான எங்களை பற்றி அக்காலம் முதல் இந்த யுகம் இருக்கும் வரை திரைப்படங்கள் வந்துகொண்டுதான் இருக்கும்.உங்களுக்கு ஏதாவது வரலாறு இருந்தால் தாங்களும் படம் எடுக்கலாம்.யாரும் தடுக்க போவதில்லை.
தற்சமயம் அரசியல் அனாதையாக இருக்கும் தாங்கள் மாஞ்சோலை தொழிலாளர்கள் சம்பவத்தை வைத்து அரசியல் செய்ததது போல் தேவர்மகன்2 படத்தை வைத்து தங்களை சாதி தலைவராக காட்டவும், தங்கள் சுயலாபத்திற்காக நீங்கள் சார்ந்த சாதியினரை பலிகடாவாக்க நினைப்பதும் கடும் கண்டனத்துக்குரியது.
இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

'ஒட்டுமொத்த திரைத்துறையும் போராட்டத்தில் குதிக்கும்'... அரசுக்கு நடிகர் கருணாஸ் எச்சரிக்கை!

மக்களுக்கான அரசியல் விழிப்புணர்வு திரைப்படமாக வந்துள்ள சர்கார் படத்துக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோர் அரசியல் பிழை செய்தோர் ஆவர் என தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்க துணைச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார். சர்கார் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளுக்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சர்கார் திரையிடப்பட்டுள்ள பல திரையரங்குகளில் இருந்த பேனர்களை அதிமுகவினர் கிழித்தனர். ஆளும் கட்சியின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் கருணாஸும் அவர்களுடன் இணைந்துள்ளார்.

சர்கார் படம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படத்திற்கு வழக்கம் போல் சர்ச்சையை கிளப்பி திரையரங்க பதாகையை கிழித்து போராட்டம் செய்து வருகின்றனர் ஆளுங்கட்சி அ.தி.மு.க.,வினர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்க அநாகரிக செயலாகும். முறையான தணிக்கை சர்கார் திரைப்படம் முறையாக தணிக்கை செய்யப்பட்டு தணிக்கைக் குழுவின் ஆட்சேபனையின்றி வெளிவந்த வேலையில் அத் திரைப்படத்தில் உள்ள காட்சிகளையும், வசனங்களையும் நீக்க சொல்லி போராடுவது சட்டவிரோத செயலாகும். அமைச்சர்களின் விருப்பம் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், உதயகுமார், கடம்பூர் ராஜு ஆகியோர் விரும்பும்படி தான் படம் எடுக்க வேண்டுமென்றால், அதை தணிக்கைக்குழு விரும்பாத படமாகத்தான் படம் எடுக்க முடியும். இவர்கள் யார் என்று தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும். 

கிராமத்து பழமொழி கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு "பொண்டாட்டி காரன் பொண்டாட்டிய அடிக்க திண்ணையில் கிடக்கிறவன் தேமி..தேமி.. அழுதானாம்" அதுபோல படத்தின் காட்சிகளுக்கு ஏற்ப வசனங்களும், நாட்டின் அரசியல் சூழலுக்கு ஏற்ப காட்சிகளையும் ஒரு இயக்குநர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் போது! அ.தி.மு.க. வினர் கொதிக்கிறார்கள் என்றால் காரணம் என்ன? அரசியல் அடாவடி அவர்களின் அரசியல் அடாவடியெல்லாம் திரைப்படங்கள் வழி தெரிந்து விடுகிறதே என்றா? சர்கார் திரைப்படம் "ஒட்டு மொத்த இன்றைய அரசியலை" தோலுரித்து காட்டி மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. அந்த விழிப்புணர்வை ஏன் மக்களுக்கு தெரியப்படுத்துகிறீர்கள் என்று அ.தி.மு.க. அராஜகம் செய்கிறதா? ஆயிரமாயிரம் படங்கள் இவ்வாறு செய்வீர்களேயானால் இன்னும் இது போல் இன்னும் ஆயிரமாயிரம் படங்கள் வெளிவந்து கொண்டே இருக்கும் அதையாரும் தடுக்க முடியாது. போலி அரசியலின் முகமூடி இதுபோன்ற படங்களில் வழியாகத்தான் கிழிந்து தொங்கும். அதை மக்களும் விரும்புவார்கள்!
திரைத்துறை போராட்டம் சட்டப்படியாக தணிக்கைபெற்ற இத்திரைப்படத்தை அரசியல் சூழ்ச்சிகளால் தடுக்க நினைப்பது, வசனங்கள் - காட்சிகளை நீக்கச் சொல்வது, கருத்துச் சொல்லும் உரிமைக்கு எதிரான செயல்பாடாகும். இச்செயலை வன்முறையாகக் கண்டிக்கிறேன். இந்நிலை தொடர்ந்து நீடிக்குமேயானால் ஒட்டுமொத்தத் திரைப்படத்துறையும் இணைந்து பெரும் போராட்டத்தை தொடங்குவோம்!

கிருஷ்ணசாமி எனும் சுயநலத் தெலுங்கர் (சான்றுகளுடன்) - வேட்டொலி

கிருஷ்ணசாமி எனும் சுயநலத் தெலுங்கர்
(சான்றுகளுடன்)
கிருஷ்ணசாமி ஒரு தெலுங்கர் என்பதற்கான சான்றுகள் வருமாறு...
-----------------
முதல் படம்,
14 மார்ச் 2014 தினமணி
டாக்டர் கிருஷ்ணசாமி சாதிச் சான்று விவகாரம்:
உயர்நீதிமன்றத் தீர்ப்பு நிறுத்திவைப்பு
by Venkatesan
புதியதமிழகம் கட்சி நிறுவனரும் சட்டப்பேரவை உறுப்பினருமான டாக்டர் கிருஷ்ணசாமியின் சாதிச் சான்று தொடர்பான உயர்நீதிமன்றத் தீர்ப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
2011 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டபோது டாக்டர் கிருஷ்ணசாமி சமர்ப்பித்த சாதிச் சான்று போலியானது என நெல்லை மாவட்டம் கொடியங்குளத்தைச் சேர்ந்த குமார் தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஜி எம் அக்பர் அலி அண்மையில் விசாரித்தார்.
கிருஷ்ணசாமியின் தந்தை கொண்டா ரெட்டி சமூகத்தையும் தாய் அருந்ததியர் சமூகத்தையும் சேர்ந்தவர்கள்.
ஆனால் வேட்பு மனுவில் தேவேந்திர குலத்தைச் சேர்ந்தவர் என கிருஷ்ணசாமி குறிப்பிட்டுள்ளார்.
-------------
அடுத்த படம்,
Mallar Advocates Association (MAA)
No.138, Thambu Chetty street,
Chennai 600001.
நாள்: 06.09.2017
அனுப்புநர்,
பெ.இராமராஜ் வழக்குரைஞர்
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை 104
தொ.எண். 9176067906
பத்திரிக்கையாளர் சந்திப்பு
உயர்திரு ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். எமது வழக்குரைஞர் சங்கம் சார்பில் வருகின்ற வியாழன் (07.09.2017) அன்று காலை 11 மணியளவில் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கவுள்ளோம்.
சந்திப்பின் நோக்கங்கள்:
1.ஆளும் பா.ஜ.க அரசின் மக்கள்விரோதத் திட்டங்களுக்கு ஆதரவளித்து தமிழ் மக்களுக்கு துரோகமிழைத்து வரும் டாக்டர் கிருஷ்ணசாமியைக் கண்டிப்பது.
2. தேவேந்திர குல வேளாளர் சாதியில் பிறக்காமல் பொய்யான சாதிச்சான்றிதழ் பெற்று அப்பாவி மக்களை ஏமாற்றும் டாக்டர் கிருஷ்ணசாமியின் போக்கை அம்பலப்படுத்துவது.
3. நீட் தேர்வுமுறையில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அனிதாவின் மரணத்தைக் கொச்சைப்படுத்திப் பேசுவதோடு தொடர்ந்து மக்கள் நலன்களுக்கு எதிராகச் செயல்படும் டாக்டர் கிருஷ்ண சாமியிடமிருந்து தேவேந்திர குல வேளாளர் சமுதாயக் கொடியாகிய சிவப்பு பச்சைக் கொடியை மக்களை அணிதிரட்டுவதற்கான அறைகூவல் விடுப்பது.
இதர முக்கிய பிரச்சனைகள் தொடர்பாகவும் சந்திப்பு நடைபெற உள்ளதால் தங்களது பிரதிநிதிகளை அனுப்பிவைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தங்கள் அன்புள்ள,
பெ.இராமராஜ்
---------------
மேற்கண்ட இரண்டு போக கிருஷ்ணசாமி குடும்பம் பற்றி விரிவாக கூறுகிறது தற்போதைய செய்தி ஒன்று:-
டாக்டர் திரு. கிருஷ்ணசாமியின் “தேவேந்திரகுலத்தான்” என்ற சாதிச் சான்றிதழை ரத்து செய்ய கோவை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு மனு
(ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழியாக்கம்)
பொருள்:
டாக்டர்.கே.கிருஷ்ணசாமி மோசடி செய்து “தேவேந்திரகுலத்தான்” என்று பெற்ற சாதிச் சான்றிதழை ரத்து செய்ய விண்ணப்பம்.
பார்வை:
கோயம்புத்தூர் தெற்கு தாலுகா அலுவலகம் மூலம் 09-1-1998 அன்று டாக்டர்.கே.கிருஷ்ணசாமிக்கு வழங்கப்பட்ட நிரந்தர சாதிச் சான்றிதழ் எண் 1063899,
SL.NO. .10 / 98
ஐயா,
டாக்டர்.கே.கிருஷ்ணசாமிக்கு தேவேந்திரகுலத்தான் என்ற சாதிச் சான்றிதழை கோயம்புத்தூர் தெற்கு தாலுகா அலுவலகம் மூலம் வழங்கப்பட்ட்டுள்ளது.
இது தவறானது, இது ஏமாற்றிப் பெற்ற சதான்றிதழாகும் அவர் தனது செல்வாக்கைத் தவறாகப் பயன்படுத்தி “தேவேந்திரகுலத்தான்” என்ற போலியான சாதிச்சான்றிதழை ஏமாற்றிப் பெற்றுள்ளார்.
எனவே மோசடிமூலம் பெறப்பட்ட அவரது சாதிச் சான்றிதழை G.O.Ms(2D) 108,dated 12th September 2007இன்படி ரத்து செய்ய வேண்டும்.
டாக்டர்.கே.கிருஷ்ணசாமி திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை தாலுகாவின் கீழ் வரும் அவரது சொந்த கிராமத்தில் இருந்து தனது சாதிச் சான்றிதழைப் பெறுவதற்குப் பதிலாக அவர் கோயம்புத்தூர் தெற்கு தாலுகா அலுவலகம் மூலம் தேவேந்திரகுலத்தான் என்ற போலியான சாதிச் சான்றிதழை நிலையான சான்றிதழாகப் பெற்றுள்ளார்.
டாக்டர்.கே.கிருஷ்ணசாமி பிறந்த சொந்த கிராம நிர்வாக அலுவலரால் முறையாக விசாரிக்கப்பட்டு நிலையான சாதிச்சான்றிதழ் வழங்கப்படவில்லை.
இது வருவாய்த் துறையின் ஆணை எண். Go.Ms.No.781 dtd 2nd May 1988 –என்பதற்கு எதிரானதாகும்.
திரு.கிருஷ்ணசாமிக்கு 09-01-1998 அன்று நிரந்தர சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அச்சான்றிதழில் அவரது முகவரி "கே கிருஷ்ணசாமி த/பெ கருப்பசாமி,
சங்கீதா மருத்துவமனை,
பாலக்காடு மெயின்ரோடு,
குனியமுத்தூர்"
என உள்ளது.
இச்சான்றிதழ் குனியமுத்தூர் கிராமநிர்வாக அலுவலரால் அவர்பிறந்த ஊர் உள்ள ,உடுமலைப்பேட்டைத் தாலுகாவில் நேரடியாக விசாரிக்கப்படாமல் கோயம்புத்தூர் தெற்கு தாலுகா அலுவலகம் மூலம் விசாரிக்கப்படாமல் வழங்கப்பட்ட்டுள்ளது.
இது மேற்படி வருவாய்த்துறையின் ஆணைக்கு எதிரானதாகும் திரு.கிருஷ்ணசாமி தேவேந்திரகுலத்தான் என்ற தனது போலியான சாதிச்சான்றிதழை வைத்துக்கொண்டு இரண்டு முறை ஓட்ப்பிடாரம் SC தொகுதியில் MLA ஆகி உள்ளார் இதன் மூலம் உண்மையான தேவேந்திரகுலமக்கள் இத்தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை இழந்தோம்.
இவர் தனது மகன் திரு.சியாம், மகள் திருமதி. சங்கீதா, இவர்களுக்கு தேவேந்திரகுலத்தான் என்று போலிச் சான்றிதழ் பெறுவதன் மூலமாக ஒட்டப்பிடாரம் MLA தொகுதி மற்றும் தென்காசி MP தொகுதிகளில் தேர்தலில் போட்டியிட வைக்க விரும்புகிறார்.
இச்செயல் உண்மையான தேவேந்திரகுல மக்கள் அங்கே போட்டியிடும் வாய்ப்பை இழக்கச் செய்வதாகும்.
ஏனெனில் திரு.கிருஷ்ணசாமி அருந்ததியர்(மாதாரி,சக்கிலியர்) சாதி இவரது மனைவி கேரளா OBC சாதி.
இவ்விருவரும் தேவேந்திரகுலமல்ல.
எனவே அவரது மகனும் மகளும் தேவேந்திர குலமல்ல..
மேலும் திரு. கிருஷ்ணசாமி தேவேந்திரகுல சாதி அல்ல.  ஏனெனில் அவரது தாயார் திருமதி தாமரை தாழ்த்தப்பட்ட அருந்ததியர் (சக்கிலியன்-12,மாதாரி சாதி)
மற்றும் கிருஷ்ணசாமியைப் பெற்ற தந்தை கருப்பக்குடும்பன் அல்ல,
கருப்பக்குடும்பன் அவரது காப்பாளர் மட்டுமே.

திரு.கருப்பக்குடும்பன் அவரது தாயார் தாமரைக்கு இரண்டாவது கணவர் ஆவார்.
திரு. கிருஷ்ணசாமி 8 வயது மற்றும் அவரது சகோதரி பாக்கியம் 6 வயது இருக்கும்போது தமது தாயார் தாமரையுடன் மசக்கவுண்டன் புதூரிலுள்ள திரு.கருப்பக்குடும்பன் வீட்டிற்கு வந்து அவருடன் சேர்ந்துள்ளார்.
அதற்குப் பின்னர் கருப்பக் குடும்பனுக்கும் தாமரைக்கும் தங்கம் என்ற ஒரு பெண் பிறந்துள்ளது.
இவ்வாறு இருக்கும்போது எப்படி கிருஷ்ணசாமி தன்னை கருப்பக்குடும்பனின் மகன் என்று கூறமுடியும்?
அரசின் விஜிலென்ஸ் குழுதான் அவரைப் பெற்ற தந்தை எந்த சாதியைச் சேர்ந்தவர் என்பதைக் கண்டுபிடிக்கவேண்டும்.
திரு. கிருஷ்ணசாமி தேவேந்திரகுலத்தான் அல்லது குடும்பன் சாதியைச் சார்ந்தவர் அல்ல.
எனவே, தாசில்தார் கோயம்புத்தூர் தெற்கு அவர்கள் டாக்டர் திரு.கிருஷ்ணசாமிக்கு தேவேந்திரகுலத்தான் என்று வழங்கப்பட்ட சாதிச் சான்றிதழை ரத்து செய்ய வேண்டும்.
அத்தோடு டாகடர் கிருஷ்ணசாமியின் மகள். திருமதி.கே.சங்கீதா மற்றும் அவரது மகன் திரு. சியாம் இவர்களுக்கும் தேவேந்திரகுலத்தான் என்று போலியாகச் சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பின் அவைகளும் ரத்து செய்யப்பட வேண்டும்.
ஆதி திராவிடர் மற்றும் Tribal நலத்துறை GO.MS.No.106 நாள் 15-10-12 ஆணைப்படி,
கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தமது விஜிலன்ஸ் குழுமூலம் இவ்வாறு போலியாகச் சான்றிதழ் பெற்ற டாகடர் கிருஷ்ணசாமியின் மீது நடவடிக்கை எடுத்து எமது சாதியை காப்பாற்றுவது கடமை.
திருநெல்வேலி,15-8-2017.
அனுப்பப்படும் நகல்கள்:
(1). Principal Secretary to Govt State of Tamil Nad ,
Revenue Department, Secretariat, Fort St George.
Chennai -600009,
(2). Principal Secretary to Govt State
தேதி: 15-8 -2017
அனுப்புநர்,
S. சிவ ஜெயப்பிரகாஷ், A.D.S.P. (ப.நி),
செல் எண்: 9442219159
செயலாளர்: மள்ளர் பாரதம் சங்கம் (பதிவு எண் .85 / 2013)
செயலாளர்: அகிய இந்திய குடும்பர் சத்திரிய மகாசபாவின் தமிழ்நாட்டுக் கிளை,
தலைமை அலுவலகம்: வாரணாசி,
உத்தரப்பிரதேசம்.
Regd. எண் .1894 (882/1910),
ஆசிரியர்: மள்ளர் பாரதம்.
முகவரி:
எண்:C-32/86H,
ஆசாத்தெரு,
மனகாவலம் பிள்ளை நகர்,
பாளையங்கோட்டை & அஞ்சல்,
திருநெல்வேலி மாவட்டம்,
தமிழ்நாடு - 627 002.
பெறுநர்,
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்,
கோயம்புத்தூர் மாவட்டம்,
ஸ்டேட் பாங்க் சாலை,
கோபாலபுரம்,
கோயம்புத்தூர் -641018
-----------
மேற்கண்ட மூன்றும் பள்ளர் பெருமக்களே கொடுத்த புகார் ஆகும்.
சில பள்ளர் உடன்பிறப்புகள் அவரது வளர்ப்புத் தந்தையை உண்மையான தந்தை என்று நம்பி அவருக்கு ஆதவாக செயல்படுகின்றனர்.
இவர் பூர்வீகம் கோவை காமராசர் வீதி (கோவை புரூக்பீட்ஸ் அருகே இருக்கும் அருந்ததியர் வசிக்கும் பகுதி).
இவர் தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர் என்பது அங்கே போய் விசாரித்தால் தெரியும்.
--------
இவரது அரசியல் நுழைவே மக்களைக் காவுகொடுத்த தாமிரபரணிப் படுகொலை மூலம் நடந்தது.
1999ல் மாஞ்சோலை தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பணியாற்றிய கிருஷ்ணசாமி,
அவர்கள் பிரச்சனை முடிந்து வேலைக்குத் திரும்பிய பிறகு நான்கைந்து நாட்கள் கழித்து எங்களை மிரட்டி கையெழுத்து வாங்கிவிட்டனர் என்று பொய்யாக பேட்டி கொடுக்க,
ஏற்கனவே அதிருப்தியில் இருந்த நிர்வாகம் உடன்படுக்கையை ரத்து செய்து வேலையை நிறுத்தியது.
அடுத்த நடந்த திருநெல்வேலி பேரணியின்போது தி.மு.க முன்பே திட்டமிட்டு தாமிரபரணி ஆற்று நீரை அதிகமாகத் திறந்து வைத்து போராடிய மக்கள் மீது காவல்துறையை ஏவி தடியடி நடத்தி  ஆற்றில் தள்ளியதால் விக்னேஷ் எனும் ஒரு வயது குழந்தை உட்பட 17 பேர் (பெரும்பாலும் பள்ளர்) இறந்தனர். 500 பேர் வரை காயமடைந்தனர்.
அந்த சூடு ஆறுவதற்குள்ளே 2001 ல் திமுகவுடன் கூட்டணி வைத்து பத்து எம்.எல்.ஏ. சீட்
வாங்கியவர்தான் இந்த கிருஷ்ணசாமி.
இவருக்காக உயிரைவிட்ட எவரையும் இவர் நினைவுகூர்ந்ததோ மரியாதை செலுத்தியதோ ஒருபோதும் கிடையாது
-------------
இது போக இவர் ஹிந்துத்வா கையாள் என்பதற்கும் இரண்டு சான்றுகள் உண்டு.
குமுதம் 16.1.1998
'என் குரு சங்கராச்சாரியார்தான்' என்று கிருஷ்ணசாமி அளித்த பேட்டிக்கான அட்டைப்பட விளம்பரம்.
இது இவரது ஆரம்பகால இந்துத்துவ சார்புக்கு சான்று ஆகும்.
மேலும், நேற்று அனிதா தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்றும்
அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாகவும்
அதை விசாரிக்க முதல்வரையும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சந்திக்கவுள்ளதாகவும் பேட்டி கொடுத்தார்.
நேற்று மாலை 7மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலமாக சென்று இரவு டெல்லியில் (மிக உயர்தர ஆடம்பரமான) ஹோட்டல் ஷெரட்டனில் தங்கிவிட்டு
இன்று (06.09.2017) காலை 11மணிக்கு எந்த (அப்பாயின்ட்மென்ட்) முன் அனுமதியும் இல்லாமல் நேரடியாக பிரதமருக்கு அடுத்தநிலையில் உள்ள உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து அனிதா மரணம் பற்றி சி.பி.ஐ விசாரிக்க மனு கொடுத்தார் டாக்டர் கிருஷ்ணசாமி.
எந்த பதவியிலும் இல்லாத ஒருவரால் நினைத்த மாத்திரத்தில் உயர்மட்ட பா.ஜ.க அமைச்சரை சந்திக்க முடிகிறதென்றால் அவர் அந்த கட்சிக்கு எவ்வளவு நெருக்கமானவராக இருக்கவேண்டும் என்று யூகிக்கமுடிகிறது.
மேலும் நீட் தேர்வினை ஆதரிக்கும் இவர் எண்ணூற்றி சொச்சம் மதிப்பெண் மட்டுமே எடுத்த தனது மகளுக்கு முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் கெஞ்சி சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான இட
ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்வியில் இடமும் வாங்கிக்கொடுத்தவர் ஆவார்.
இதனை பாலா பாரதி (கன்னடர்) அம்பலப்படுத்தியுள்ளார்.

இவர் தற்போது மத்திய அரசிடம் எதிர்பார்ப்பது தனது மகளுக்காக திருவனந்தபுரத்தில் கட்டிவரும் மிகப் பிரம்மாண்டமான மருத்துவமனைக்கு எந்த தடங்கலும் வரக்கூடாது என்பதுதான்.

எங்கெங்கு நோக்கினும் உருமறைப்பு வந்தேறிகள் !


https://vaettoli.blogspot.com/2017/09/blog-post_62.html?fbclid=IwAR26iwrtYT66Isx1UueP5KPPqDkVW-WUAuq-osZX10dnPySKjrFn2kI3CWs

Thursday, November 8, 2018

தேவர் சமுதாயம் கல்லூரி

தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக முதன்முதலில் ஒரு சமுதாயம் கல்லூரி கட்டியதென்றால் அது தேவர் சமுதாயம் தான்.
45ஆண்டுகளுக்கு முன்பே தேவர் பெயரில் மூன்று கல்லூரிகளைசாமானிய மக்களுக்காக கட்டி நடத்திய சமுதாயம் தேவர் சமுதாயம். இதை சரியாக பயன்படுத்தியிருந்தால் தமிழகத்தில் பசும்பொன் தேவர் பல்கலைக்கழகமே மிகப்பெரிய கல்வி சேவை செய்யும் நிலை இருந்திருக்கும். ஆனால் எவனெவனோ பெயரில் இன்று பல்கலைக்கழகம் உள்ளது ஆனால் தேவர் பெயரில் இல்லை. மூன்று கல்லூரியை கூட காப்பாற்றிகொள்ளாத கோமாளிகளின் கூடாரமாய் போனது இந்த சமுதாயம். இரண்டு கல்லூரிகளை இழந்துவிட்டோம் உசிலம்பட்டி கல்லூரியை தவிர. கமுதி கல்லூரி அரசு கல்லூரியானது, மேலநீலிதநல்லூர் தேவர் கல்லூரி #கேரள_நாயர் கல்லூரியாக போனது.
ஆனாலும் தேவர் பெயரில் கல்லூரி புதிதாக துவங்கபோவதாக சிலர் அவ்வபோது கிளம்பி வசூல் செய்து மாயமாகி போகின்றனர். உதரானத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன் சிவகங்கையில் ஒரு அடிக்கல் நாட்டுவிழா, ஏன் சில நாட்களுக்கு முன்பு கூட ஒரு தேவர் கல்லூரிக்கு ஒரு அமைச்சரை அழைத்துவந்து அடிக்கல் விழா நடத்தினர். இதுபோன்ற கூத்துகள் தொடர்கதையாகிவிட்டது.
நூற்றுக்கணக்கில் சமுதாய அமைப்பு இங்கு உண்டு. ஆனால் அனைவரும் தங்களை மட்டுமே முன்னிருந்த போட்டி போடுகிறார்களே தவிர சமுதாய வளர்ச்சிக்கு ஒரு முயற்சியும் செய்ததே இல்லை. நான் அறிந்தவரையில் மறைந்த வெள்ளைச்சாமிதேவர் கமுதி கல்லூரியை நல்ல நிலைக்கு கொண்டுவர முயன்றார். புதிதாக ஒரு படிப்பை (பட்டத்தை) தன் செலவில் கொண்டுவந்தார். நம் நேரம் அவர் மறைந்து விட்டார். ஆனாலும் மேலநீலிதநல்லூர் கல்லூரியை போல் கமுதி தேவர் கல்லூரி முழுமையாக நம் கையை விட்டுபோகவில்லை. எளிதாக மீட்கலாம் மீட்டு சிறந்த கல்வி சேவை செய்யலாம். இதை வைத்து மேலநீலிதநல்லூர் கல்லூரியை பிற்காலத்தில் எளிதாக மீட்கலாம். எனக்கு தெரிந்து ஒரே வழி தான் உள்ளது. அது கள்ளர் கல்விகழகம் தான் .
ஒரு குழு அமைத்து நிர்வாகம் செய்வதெல்லாம் சாத்தியமில்லை, சில ஆண்டுகளுக்கு முன்பு கூட கமுதி கல்லூரியை நிர்வாகம் செய்ய குழு அமைத்த முறையை கேட்டாளே தெரியும் அது வெளங்காது என, அதாவது திமுக அதிமுக என கட்சியினர் சம அளவில் கட்சியினரை நியமித்து நாசமா போனது. மீண்டும் அது போல் அமைத்தால் இனி அதிமுக,திமுக, அமமுக என போட்டுதான் குழு இங்கே அமைக்க முடியும். அது மண்ணாகத்தான் போகும். ஆனால் கள்ளர் கல்விகழகத்திடம் பொறுப்பை ஒப்படைத்தால் மிகச்சிறப்பாக நடந்த முடியும். ஏனென்றால் உசிலம்பட்டி கல்லூரி நிர்வாகமே உதாரணம் அதற்கு. நம்மிடமே இரண்டு கல்லூரிகள் இல்லாமல் போவதை தடுக்க இதன் மூலம் மட்டுமே தடுக்க முடியும். இதை விடுத்து வேற வகையில் முயன்றால் பூமாலையை குரங்கு கைகளில் கொடுப்பது போலாகிவிடும்.
கள்ளர் கல்வி கழத்தை நாடி யாராவது இந்த முயற்சியை ஏற்படுத்த சொல்லுங்கள். 

திரு.TTV தினகரன்

திரு.TTV தினகரன் அவர்களின் தொடர் பிரச்சாரங்களை பாஜகவின் பினாமிகள் பன்னீர் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியால் எதிர்கொள்ள முடியவில்லை - காங்கிரஸ் கட்சியின் கோபண்ணா.
திரு.TTV தினகரன் அவர்கள் அமமுகவை அடிமட்டத்தில் இருந்து கட்டமைத்து வருகிறார். அவர் உழைப்பு அசாத்தியமானது, அது வீண்போகாது. - நடிகை விஜயசாந்தி
திரு.TTV தினகரன் அவர்கள் சுயம்புவாக வளர்ந்து வருகிறார் - நடிகர் பாக்கியராஜ்

Vetri Mahalingam

இந்த கி.சாமியை என்ன செய்வது?


Image may contain: textImage may contain: textImage may contain: text
தேவர் மகன் 1 ல் ஒரு சாதி வசனமும் கிடையாது. அது பங்காளி சண்டை படம்.
தலித் கிருஷ்ணசாமியால் தாங்க முடியாமல் போனதற்கு ஒரேயொரு காரணம் 'போற்றிப் பாடாடி பெண்ணே' பாடல் தான்.
கவிஞர் வாலியின் அனுபவ வரிகள் அவை. - புதுமலர் பிரபாகரன்

Sunday, November 4, 2018

#கண்டன_அறிக்கை

60% சதிவீதத்திற்கு மேல் பேருந்து கட்டணத்தை உயர்த்தியதோடு மட்டுமல்லாமல் அநியாயமான முறையில் சொத்துவரியை பலமடங்கு உயர்த்தி தங்களின் நிர்வாக திறமையின்மையின் காரணமாக நிதிச்சுமையை மக்கள் தலையில் தாங்கமுடியாத பாரமாக ஏற்றியுள்ள பழனிச்சாமி அரசுக்கு எனது கடும் கண்டனங்களை தெரிவிக்கிறேன்!!!
கழக துணைப் பொதுச்செயலாளர்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்
‘மக்கள் செல்வர்’டிடிவி.தினகரன்

முகநூலில் கலக்கும் ஒரு வயது #கோசிவா_ரெட்டி


Image may contain: 5 people, beard and closeup
அக்கா #மோகனா_பாரதி அவர்களின் மகள் வழிப்பேரன் கோசிவா ரெட்டி. சென்ற ஆண்டு (2017) தேவர் ஜெயந்தி அன்று தான் பிறந்தார். இந்தாண்டு கோரிப்பாளையம் தெய்வீக திருமகனார் தேவரின் திருவுருவ சிலைக்கே வந்து அருள் ஆசி பெற்று விட்டார். இவர்கள் ரெட்டி சமூகத்தை சார்ந்தவர்கள். நம்மினத்தின் மீது அதிகம் பற்று கொண்டவர்கள். இந்த குழந்தை. தன் தாய், தந்தையுடன் வசிப்பது ஆந்திராவில்.....

தேசிய தலைவர் தேவர் திருமகனாரை முகநூலில் திட்டமிட்டு அவதூறு


Image may contain: 3 people
Image may contain: 4 people, people smiling


தேசிய தலைவர் தேவர் திருமகனாரை முகநூலில் திட்டமிட்டு அவதூறு பறப்பும் தினமணி நாளிதழில் செய்தி பிரிவில் பணிபுரியும் சித்தார்த் என்ற Daniel Clinton என்னும் நபரை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில பொதுச்செயலாளர் மகேஷ்வரன் மற்றும் மாநில தலைவர் நவமனி அவர்களின் ஆனைக்கினங்க மாநில நிதிச்செயலாளர் போடி இரா.காசிராஜன் அவர்கள் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.....