தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக முதன்முதலில் ஒரு சமுதாயம் கல்லூரி கட்டியதென்றால் அது தேவர் சமுதாயம் தான்.
45ஆண்டுகளுக்கு முன்பே தேவர் பெயரில் மூன்று கல்லூரிகளைசாமானிய மக்களுக்காக கட்டி நடத்திய சமுதாயம் தேவர் சமுதாயம். இதை சரியாக பயன்படுத்தியிருந்தால் தமிழகத்தில் பசும்பொன் தேவர் பல்கலைக்கழகமே மிகப்பெரிய கல்வி சேவை செய்யும் நிலை இருந்திருக்கும். ஆனால் எவனெவனோ பெயரில் இன்று பல்கலைக்கழகம் உள்ளது ஆனால் தேவர் பெயரில் இல்லை. மூன்று கல்லூரியை கூட காப்பாற்றிகொள்ளாத கோமாளிகளின் கூடாரமாய் போனது இந்த சமுதாயம். இரண்டு கல்லூரிகளை இழந்துவிட்டோம் உசிலம்பட்டி கல்லூரியை தவிர. கமுதி கல்லூரி அரசு கல்லூரியானது, மேலநீலிதநல்லூர் தேவர் கல்லூரி #கேரள_நாயர் கல்லூரியாக போனது.

ஆனாலும் தேவர் பெயரில் கல்லூரி புதிதாக துவங்கபோவதாக சிலர் அவ்வபோது கிளம்பி வசூல் செய்து மாயமாகி போகின்றனர். உதரானத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன் சிவகங்கையில் ஒரு அடிக்கல் நாட்டுவிழா, ஏன் சில நாட்களுக்கு முன்பு கூட ஒரு தேவர் கல்லூரிக்கு ஒரு அமைச்சரை அழைத்துவந்து அடிக்கல் விழா நடத்தினர். இதுபோன்ற கூத்துகள் தொடர்கதையாகிவிட்டது.
நூற்றுக்கணக்கில் சமுதாய அமைப்பு இங்கு உண்டு. ஆனால் அனைவரும் தங்களை மட்டுமே முன்னிருந்த போட்டி போடுகிறார்களே தவிர சமுதாய வளர்ச்சிக்கு ஒரு முயற்சியும் செய்ததே இல்லை. நான் அறிந்தவரையில் மறைந்த வெள்ளைச்சாமிதேவர் கமுதி கல்லூரியை நல்ல நிலைக்கு கொண்டுவர முயன்றார். புதிதாக ஒரு படிப்பை (பட்டத்தை) தன் செலவில் கொண்டுவந்தார். நம் நேரம் அவர் மறைந்து விட்டார். ஆனாலும் மேலநீலிதநல்லூர் கல்லூரியை போல் கமுதி தேவர் கல்லூரி முழுமையாக நம் கையை விட்டுபோகவில்லை. எளிதாக மீட்கலாம் மீட்டு சிறந்த கல்வி சேவை செய்யலாம். இதை வைத்து மேலநீலிதநல்லூர் கல்லூரியை பிற்காலத்தில் எளிதாக மீட்கலாம். எனக்கு தெரிந்து ஒரே வழி தான் உள்ளது. அது கள்ளர் கல்விகழகம் தான் .
ஒரு குழு அமைத்து நிர்வாகம் செய்வதெல்லாம் சாத்தியமில்லை, சில ஆண்டுகளுக்கு முன்பு கூட கமுதி கல்லூரியை நிர்வாகம் செய்ய குழு அமைத்த முறையை கேட்டாளே தெரியும் அது வெளங்காது என, அதாவது திமுக அதிமுக என கட்சியினர் சம அளவில் கட்சியினரை நியமித்து நாசமா போனது. மீண்டும் அது போல் அமைத்தால் இனி அதிமுக,திமுக, அமமுக என போட்டுதான் குழு இங்கே அமைக்க முடியும். அது மண்ணாகத்தான் போகும். ஆனால் கள்ளர் கல்விகழகத்திடம் பொறுப்பை ஒப்படைத்தால் மிகச்சிறப்பாக நடந்த முடியும். ஏனென்றால் உசிலம்பட்டி கல்லூரி நிர்வாகமே உதாரணம் அதற்கு. நம்மிடமே இரண்டு கல்லூரிகள் இல்லாமல் போவதை தடுக்க இதன் மூலம் மட்டுமே தடுக்க முடியும். இதை விடுத்து வேற வகையில் முயன்றால் பூமாலையை குரங்கு கைகளில் கொடுப்பது போலாகிவிடும்.
கள்ளர் கல்வி கழத்தை நாடி யாராவது இந்த முயற்சியை ஏற்படுத்த சொல்லுங்கள்.
No comments:
Post a Comment