Friday, November 16, 2018

'கவியரசு' கண்ணதாசன் பார்வையில் கள்ளர்கள்

வேலும் வாழும் தங்கிய மறவர் வீழ்ந்ததும் கிடையாது!
எக்குலத் தோரும் ஏற்றிப்புகழ்வது எங்கள் பெருமையடா!
எம் முக்குலத்தோர்க்கே உலகில் உவமை காண்பது அருமையடா! "
- என்று மண்ணின் மைந்தன் கவியரசு கண்ணதாசன் ‘சிவகங்கை சீமை’ திரைப்படத்தில் எழுதிய பாடல் வரிகள் இவை.
இதைப்பற்றி ஒருவர் அவரிடம் முக்குலம் என்பது சாதியை குறிப்பதல்லவா? என்று கேட்டதற்கு கவியரசு கண்ணதாசன் அவர்களின் பதில்.
முக்குலம் என்பது சாதியல்ல. கள்ளப்படை, மறப்படை, அகப்படை ஆகிய மூன்று படைகளை குறிக்கும். பகைவரின் பாசறைக்குள் ஊடுருவி உளவறிந்து வருவது கள்ளப்படை, நேர் சென்று போர் புரிவது மறப்படை. கோட்டையை காப்பது அகப்படை. இம்முப்படைகளே கள்ளர் - மறவர் - அகம்படியர் என்ற முக்குலமாக மாறின. தலைமறைந்து செல்வதை கள்ளத்தனம் என்றும், துணிந்து நிற்பதை மறத்தனம் என்று அழைப்பதை அறிவீர்கள். இவை, பின்னால் வந்த வழக்குகள். உளவறியும் கடினமான வேலையை செய்ததால்தான், கள்ளப்படைக் குலத்தினரை "அம்பலக்காரர்கள்" என்று மரியாதையோடு அழைக்கிறது மறவர் நாடு.

1 comment:

My life small story said...

Neenga ambalakkaranu entha oorleyum sollakoodathu